அறம்




1.சமரசக்கொடி


கொள்கைப் பேசி

கூட்டம் சேர்க்க 

நீங்கள் நீட்டிப் பிடிக்கும்

கொடிகளின் 

நிறங்கள் வெவ்வேறு.....


கொள்கையை

பிரதிபலிக்க வேண்டிய

கொடியின் நிறங்கள் 

சில நேரங்களில்

சிலருக்காக

வெள்ளைக் கொடிகளாகிப்போவதென்ன வேடிக்கை?!


2.அரசு நமக்கானது.


இறந்த பின்பு

அரசு மரியாதையெல்லாம்

கிடைக்க வேண்டாம்,

இருக்கும்போது

அரசு மருத்துவமனையில் 

கொஞ்சம்

மரியாதை கிடைத்தால் போதும்!


3. தீண்டும் ஆமை


ஒரே கடையில் 

அதே விலையில்

நேற்று 

நான் குடித்த 

குவளையில் நீயும் 

நீ குடித்த 

குவளையில் நானும் 

அருந்தும் தேநீரில் 

உனக்கு மட்டும் என்ன

மூல வியாதி

மருந்து கலந்தா கொடுக்கிறார்கள்?

உட்கார்ந்து குடிக்க மறுக்கிறாயே

என் அருகில்....


4.ஒரு காதல் கதை 


எனக்கு பிடித்த எல்லாமும் 

உனக்கு பிடிக்கத் தேவையில்லை..

உனக்கு பிடித்த எல்லாமும்

சில நேரங்களில் எனக்கும் பிடிப்பதில்லை...


ஆனால்,

நீயும் நானும் 

ஒன்றாகவே இருக்கின்றோம்,

ஒரு முட்டைக்குள் 

மஞ்சள் கரு வெள்ளை கருவைப் போல.....


5.ஆறறிவு விலங்கு.


மதத்துக்குள் அடங்கும்

கடவுளால் கூட

மதங்கொண்ட யானையை அடக்க முடிவதில்லை!


கோயில் 

யானையின் பாகனைக்கூட 

காப்பாற்ற முடியாத 

கடவுளால் 

எப்படி 

யாவரையும் காக்க முடியும்?

இப்போதாவது நம்புங்கள் 

கடவுள் இல்லை என்று!!


#பகத்சிங் 








 

Comments

  1. அனைத்தும் மிக சிறப்பு

    அதிலும் தீண்டும் அமையும், சமரசக் கொடியும், அற்புதம்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர் ❤️

      Delete

Post a Comment

Popular posts from this blog

மரப்பயணம்

திருமா திமுகவுடன் தான் இருப்பார்!!