திருமா திமுகவுடன் தான் இருப்பார்!!
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆனந்த விகடன் வெளியிட்ட ' எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' எனும் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தவெக தலைவரும் நடிகருமான விஜய் அவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு கூட்டணி கட்சிகளின் அழுத்தம் இருப்பதாக சொல்லிவிட்டு, திருமா திமுகவின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதைப் போல பேசினார்!
முதலில் அதற்கு வன்மையான கண்டனங்களை பதிவு செய்கின்றோம்!
அதற்கும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தலைவர் திரு திரு. திருமா அவர்கள், "அழுத்தம் கொடுத்து இணங்கக் கூடிய அளவிற்கு நானும் விடுதலைச் சிறுத்தைகளோ பலவீனமாக இல்லை" என்று பதிலடி கொடுத்தார்.
இது பற்றி நம்முடைய பார்வையை உங்கள் முன் எடுத்துரைக்கிறோம்.
முதலில், 'திருமா அவர்கள் திமுக கூட்டணியில் தான் இருப்பார். திமுக கூட்டணியில் தான் இருக்க வேண்டும்' என்பதுதான் சரியான வாதமாகும்.
ஏனென்றால்,ஆரம்ப காலத்தில் தலித் மக்களின் குரலாக அறியப்பட்டு, இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் திருமா அவர்களின் அரசியல்பணி தமிழ்நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் எப்போதும் தேவைப்படும் குரல். எத்தனை எத்தனை தியாகங்கள் எத்தனை எத்தனை அர்ப்பணிப்புகள் செய்தாலும் அதிகாரத்தை கைப்பற்றுதல் என்பது தான் அடித்தட்டு மக்களின் வாழ்வியலை மேம்படுத்த உதவும் என்பது புரட்சியாளர் அம்பேத்கரின் கோட்பாடு.
அப்படி அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது தலித் இயக்கமாக தனித்து இயங்குவதால் மட்டுமே சாத்தியம் அடையாது என்பது நாம் மட்டுமல்ல தலைவர் திருமா அவர்களும் அறிந்த உண்மை. அதற்காக விடுதலைச் சிறுத்தைகள் எனும் கட்சி தலித் பிரச்சனைகளுக்கு மட்டும் குரல் கொடுக்காமல் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்தன் விளைவு,
இன்றைக்கு இரண்டுப் பொதுத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட நான்கு சட்டமன்ற உறுப்பினர்களையும், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வென்று, தலித் கட்சி என்கிற முத்திரையை கிழித்து இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறி இருக்கிறது.
தனித்து நிற்பதால் இதை சாத்தியப்படுத்தி இருக்க முடியாது என்பதும் உண்மை. ஆனால், திருமா அவர்கள் சுமந்து வந்த தியாகதீபம், இன்றைக்கு தீப்பந்தமாக ஒளிவிட்டு எரிவது ' திராவிட மாடல் ' ஆட்சி செய்யும் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிப்பதின் விளைவாக தானே தவிர , வேறு எந்த காரணங்களும் எவரும் சொல்லவே முடியாது! திருமா எனக்கு மூத்த சகோதரர் என்று திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான திரு மு க ஸ்டாலின் அவர்கள் சொல்லியிருப்பது விடுதலைச் சிறுத்தைகள் மீதும் தலைவர் திருமாவின் மீதும் அவருக்கு இருக்கும் அளவு கடந்த அன்பு மற்றும் நம்பிக்கையின் வெளிப்பாடாகும்!
'திராவிட மாடல்,ஆட்சியில் குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. தொகுதி பங்கீட்டில் விடுதலை சிறுத்தைகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்பதெல்லாம் ஒப்புக்கொள்கிறோம்!!ஆனால் தலைவர் திருமா அவர்கள் விஜயோடு இணைந்து நிற்பதால், தமிழ்நாட்டின் அறிவார்ந்த, அனுபவிக்க தலைவர் தன்னோடு இருப்பதை நினைத்து திரு விஜய் அவர்கள் வேண்டுமானால் பெருமைப்பட்டுக் கொள்ளலாமே தவிர,
எங்கோ ஒரு இடத்தில், சாதியவாதத்தால் பாதிக்கப்படும் கடை கோடி தலித் ஒருவனுக்கு நீதி கிடைக்குமா?
எங்கோ ஒரு இடத்தில், ஆணவக் கொலை செய்யப்படும் தலித் இளைஞனுக்கு நீதி கிடைக்குமா?
எங்கோ ஒரு இடத்தில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகும் தலித் பெண்ணுக்கு நீதி கிடைக்குமா? என்பதெல்லாம் கேள்விக்குறியாகிறது!
பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களுக்கு ஏற்படும் சாதி ரீதியான பாகுபாடுகள் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்தது! அயோத்திதாச பண்டிதர், ரெட்டைமலை சீனிவாசன் உள்ளிட்ட தலித் போராளித் தலைவர்களுக்கு மணிமண்டபம் அமைத்தது.
பஞ்சமிநில மீட்பு ஆணையம்,
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டம்,
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை ' அனைத்து உலக சமத்துவ நாள்' என அறிவித்தது உட்பட விடுதலைச் சிறுத்தைகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் அரசாக தான் இருக்கிறது திராவிட மாடல் அரசு.
கருத்தியல் கணக்குகளைத் தாண்டி, வாக்கு வங்கி அரசியலை ஆராய்ந்து பார்த்தாலும், விஜய் அவர்களால் என்ன செய்ய முடியும் என்கிற கருத்துதான் மேலோங்குகிறது.
அதாவது, தமிழ்நாட்டில் அதிக வாக்கு வங்கி வைத்திருக்கும் இருவரும் கட்சிகள் திமுக மற்றும் அதிமுக தான்! அதிகபட்சம் போனால் இந்த இரு கட்சிகளில் இருந்தும் தலா மூன்று சதவீத வாக்குகளை விஜயால் பிரிக்க முடியும்! பிறகு தனக்கென்று இருக்கும் ரசிகர் பட்டாளத்தின் வழியாக இரண்டு முதல் நான்கு சதவீத வாக்குகளையும், பிற கட்சிகளில் இருந்து ஒட்டுமொத்தமாக மூன்று சதவீத வாக்குகளை எடுக்க முடியும்!
ஒட்டுமொத்தமாக கூட்டி கழித்து பார்த்தால் கூட 10 அல்லது 15 சதவீதம் வரை தான் வாங்க முடியும்! இவர் பேசுகின்ற அரைகுறை அரசியலுக்கு பத்து அல்லது பதினைந்து சதவீதத்தை வைத்துக்கொண்டு ஆட்சி அமைத்துவிட முடியுமா என்கிற கருத்தும் எழுகிறது!
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றை பொறுத்தவரையில் திமுக அதிமுக அல்லாத அணியை விரும்புவோரின் சதவீதம் பத்து சதவீதம் என்பது எப்போதும் இருப்பது தான் என்பதை நினைவு கூற விரும்புகிறேன்.
மேலும், ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு செல்லும் சிறப்பு அழைப்பாளர் என்பவர் தான் வெளியிடப் போகும் புத்தகத்தைப் பற்றியும் அதில் இருக்கின்ற கட்டுரைகள் பற்றியும் பேச வேண்டும்! அதன் மூலம் தனக்கு இருக்கும் எண்ணங்களை விவரிக்க வேண்டும்.
ஆனால் நேற்று பேசிய நடிகர் விஜய் அவர்கள் புத்தகத்தைப் பற்றியும் புத்தக வாசிப்பு குறித்தும் எதுவுமே பேசாமல், புரட்சியாளர் அம்பேத்கரை பற்றி நாம் மேலோட்டமாக நமக்கு வரும் தகவல்களையே அவரும் பேசிவிட்டு, திமுக மீதான காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தும் மேடையாக மாற்றிக் கொண்டார்!
தமிழ்நாட்டில் சாதி இருக்கும், ஆனா silent-ஆ தான் இருக்கும் என்கிற தவறான புரிதலோடு இருக்கும் நடிகர் விஜய் அவர்கள் இருக்கும் மேடையை தவிர்த்ததுதான் திருமாவின் அரசியல் யுத்தி!
ஜெய் பீம்!!
பகத்சிங்
.jpeg)

Comments
Post a Comment