Posts

Showing posts from June, 2021

எம்மக்களே!!

Image
எம்மக்கள் !! இலைகள் மாதிரி!! அறியாமை எனும் காற்றில் தெளிவில்லாமல் வாழ்ந்து பின் சருகாக வீழ்கின்றனர்!! புரட்சி எனும் புயல்கொண்டே அவர்களை புதுப்பிக்க வேண்டும்!! எம்மக்கள், பரமசிவன் பாம்பு மாதிரி பழமைவாதம் தலைக்கேறியதில் பதவியில் இருந்தும் பயனற்று கிடக்கின்றனர்!! பகுத்தறிவு என்பதை பறை இசைபோல பளிச்சென்று சாற்றி அவர்களை பக்குவப்படுத்திட வேண்டும்!! எம்மக்கள்! காட்டுக்குதிரை மாதிரி!! ஆதரவும் அரவணைப்பும் இல்லாதபோதும் சுதந்திரமற்ற சமூகத்தில் சுழி இருக்க விடாத மாதிரி சுற்றி திரிகின்றனர் சுதந்திரமாய்!! அவர்களுக்கு கல்வி எனும் கடிவாளம் போட்டு நிதானப்படுத்தி பின் நிலைப்படுத்திட வேண்டும்!! எம்மக்கள்!! கூண்டுக்குள் அடைப்பட்ட குருவிகள் மாதிரி!! குழப்பவாதிகளிடம் சிக்கி குலப்பெருமை பணப்பெருமை பேசி குறுகிய வட்டத்திற்குள் சுருங்கி விட்டனர்!! அவர்களின் அறியாமை கதவை உடைத்து ராஜாளி என உணர்த்தி பொதுவுடைமை எனும் கண்கொண்டு உலகை உயர்ந்து பார்க்க செய்திடல் வேண்டும்!! எம்மக்கள் வெட்டிபோட்ட விறகு மாதிரி!! அறிவென்பது சிறிதும் இன்றி அங்காளி பங்காளி என்று பிளவுபட்டு க...

கலங்கவைத்த கர்ணன்.

Image
இந்துத்துவ ஆதிக்கத்திற்கு பின்னர், அழித்தொழிக்கப்பட்ட தலையில்லா புத்தரின் சிலையை காண்பிப்பதோடு படம் தொடங்குகிறது. ஆரம்பம் முதல் கடைசி வரையில் இருக்கையின் நுனியிலேயே திரைக்கதையின் வேகம் நம்மை அமரவைக்கிறது. அதிகம் மெனக்கெட்டு நடித்திருக்கும் தனுஷ் மற்றும் லால் போன்றோரின் யதார்த்தமான நடிப்பு, முதல் பாதியில் ஆதி இசையையும் அடுத்த பாதியில் நவீன இசையையும் அள்ளி தெளித்திருக்கும் சந்தோஷ் நாராயணனின் இசையும், தேனி ஈஸ்வரன் அவர்களின் திகட்டாத ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்கிறது. படத்தின் வேகத்திற்கு எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாத மாதிரி படத்தொகுப்பை மிக தெளிவாக கையாண்டு இருக்கிறார்கள். யுகபாரதியின் வரிகளில் இலக்கிய வாடையும், எதார்த்த வரிகளில் எளிய மக்களின் விடுதலையும் தெறிக்கிறது. "மஞ்சனத்தி புராணம்" கண்ணீர் வர வைக்கிறது. *கர்ணன் எப்படி?* அதிகார வர்கத்தினரால் எளிய மக்களின் மீது ஏவப்படும் அடக்குமுறைகளுக்கு எதிரான கோபத்தின் வெளிப்பாடே கர்ணன். கர்ணனின் "சுயசாதிபற்றை தூக்கி பிடித்திருக்கிறார்கள் என்றும், "சாதிய குறியீடுகளை அதிகம் வைத்திருக்கிறார்கள்" என்றும் இங்கே சி...

"தாழ்த்தப்படும் மக்களும் தமிழர் பண்பாடும்"

Image
 "தாழ்த்தப்படும் மக்களும் தமிழர் பண்பாடும்" அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் புரட்சிகர வணக்கம்! 'தாழ்த்தப்பட்ட மக்கள் அல்லது ஒடுக்கப்பட்ட மக்கள் என்று பேசினாலோ எழுதினாலோ வழக்குப்பதிவு செய்யப்படும்' என்கின்ற செய்தியை சமீபத்தில் எங்கேயோ படித்தேன். எனவே இப்போது எழுதுகின்ற கட்டுரைக்கு இந்த தலைப்பே மிகச் சரியாக இருக்கும் என இதையே தேர்வு செய்து கொண்டேன். சமீபகாலங்களில் தமிழரின் பண்பாட்டு கூறுகள் என மிகப்பெரும் ஆய்வாளர்களும் அறிஞர்களும் எழுதிய கட்டுரைகளை வாசிக்க நேர்ந்தது. அதன் அடிப்படையில் அவர்கள் எழுத மறந்த, மறுத்த செய்திகளை எழுத முற்படுகிறேன். வாருங்கள் பண்பாட்டிற்குள் செல்வோம்... தமிழர்களுக்கு  என்று தனியாக ஒரு பண்பாடு இருந்ததாகவும், தமிழர்கள் அனைவரும் அந்த பண்பாட்டை ஒரே மாதிரியாக பின்பற்றியதாகவோ, அனைத்து தமிழர்களும் சமத்துவமாக நடத்தப்பட்டதாகவோ இதுவரை எந்த தகவலும் இல்லை. வரலாற்று ரீதியாகவும் சரி செவிவழி செய்தியாகவும் சரி, சமத்துவம் என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. எனவே தமிழரின் பண்பாட்டு கூறுகள் அல்லது தமிழர் பண்பாடுகள் என்று  இங்கே இருக்கும் முக்கியமான சில வி...