Posts

Showing posts from November, 2021

ஜெய் பீம்!! ஒடுக்கப்பட்டவர்களுக்காக..

Image
சாதியின் அடிப்படையில் காவல்துறையினரால் பொய் வழக்கில் கைது செய்யப்படும் இருளர், குறவர் மற்றும் ஒட்டர் சமூக இளைஞர்கள் ஒரு புறமும், அதே சாதியின் அடிப்படையில் திருட்டு வழக்கில் கைது செய்யப்படாமல் காவல்துறையினரால் பாதுகாக்கப்படும் இடைநிலை சாதியினரும் என  அதிகார வர்க்கத்தில் இருக்கும் நபர்களின் சாதியப் பாகுபாட்டை வெளிப்படையாக காட்சிப்படுத்துவதிலிருந்து துவங்குகிற து ஜெய் பீம்.. திருடன் என  காவல்துறையினரால்  குற்றம்சாட்டப்பட்டு, பொய் வழக்கில் கைதாகி தன் உயிரை இழந்த அப்பாவி இருளர் இளைஞர் ஒருவரின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடும் நேர்மையான வழக்கறிஞராக நடிகர் தோழர் சூர்யா தனது கதாபாத்திரத்தை மிகச்சரியாக தேர்வு செய்து நடித்துள்ளார். ஆளும் அதிகார வர்க்கத்தின் தவறுகளை எந்த ஒரு ஒழிவுமறைவில்லாமல் அதே யதார்த்த முகத்தோடும் உண்மைத்தன்மையோடும் காட்சிப்படுத்தியதால் படம் எந்த இடத்திலும் தொய்வடையவே இல்லை. கதையின் விறுவிறுப்பும் குறையவில்லை..  சரி நாம் கட்டுரைக்குள் வருவோம். தோழர்களே!  விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் கைதிகளை போலீசார் நடத்தும் விதம், அவர்களுக்கு கொடுக்கப்படும் அவமர...