Posts

Showing posts from December, 2020

என்ன செய்தார் இளையராஜா!

Image
 எனது அன்பு நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கம். அரசியல் கட்டுரைகளின் நீட்சியாக கலைத்துறையில் ஏதேனும் எழுத வேண்டும், அதிலுள்ள அரசியல் பார்வைகளை இங்கே பதிவிட வேண்டும் என்கிற நோக்கில் இப்போது நான் எழுதியிருக்கும் கட்டுரை இது! என்னை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் இளையராஜாவின் இசைக்கு நன்றி சொல்லி உரையாடலாம் வாருங்கள்!  இசைஞானி இளையராஜா போற்றுதலுக்குரியவரா? இவர் துறையை கடந்து இவர் சாதித்தது என்ன? இசை மேதையாக இருந்தும் இவரால் இன்னும் 'சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ஏன் பெற முடியவில்லை?' என்றெல்லாம் நாம் இங்கே பேச இருக்கின்றோம் நண்பர்களே! இசைஞானி போற்றுதலுக்குரியவரா? என்றால் உண்மையில் இவர் இல்லாமல் போயிருந்தால் இரண்டு தலைமுறை தமிழர்கள்,தங்களின் சோகம்,அழுகை,தவிப்பு,பாசம்,நட்பு,மகிழ்ச்சி போன்ற பல உணர்வுகளை பகிர்ந்துகொள்ள, "மனிதனுக்கு மாற்று இல்லாமல் போயிருக்கும்". இதேபோல வரும் தலைமுறையினருக்கும் ஒரு மிகப்பெரிய இழப்பாகவே இருந்திருக்கும்.இத்தனைக்கும் மேலே இசை பற்றிய அறிவை நாம் இழந்திருக்கக்கூடும்! ஆம் நண்பர்களே, நான் ஒரு இளையராஜா இசையின் ரசிகன் என்பத...