ரைட்டர் அதிகாரமற்ற அதிகாரியின் குரல்.
"மீனவர் சங்கம்,ஓட்டுநர் சங்கம், கட்டுநர் சங்கம் என பல்வேறு சங்கங்கள் இருப்பதை போல காவலர்களுக்கென்றும் ஒரு சங்கம் வேண்டும்! சங்கம் வலிமைமிக்கது.காவல்துறை என்பது மக்கள் நலன் சார்ந்தது. என்றாலும், மக்களோடு தொடர்பில் இருப்பது கடைநிலை காவல் அதிகாரிகள்தானே தவிர, அதிகாரத்தில் இருப்பவர்கள் அல்ல!" என்கிற கோட்பாட்டு முழக்கத்தோடு இயங்கும் கம்யூனிச பின்புலம் கொண்ட, ஒரு காவல் நிலைய எழுத்தாளர் பணியாற்றி வருகிறார். சங்கம் அமைப்பது தொடர்பாக பல ஆண்டுகள் போராடி, இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார்! இப்படியாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு காவல் நிலைய எழுத்தாளரின் வாழ்வில் ஒரு இளைஞனை சந்திக்க நேரிடுகிறது. அவன் டெல்டா பகுதியில் வசிக்கும் தலித் கிறிஸ்தவ பின்னணி கொண்டவன். வேலைப்பளுவின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட காவல்துறை அதிகாரிகளை பற்றி ஆய்வு மேற்கொள்ளும் முனைவர் பட்ட மாணவன். தற்கொலை மரணம் பற்றிய இவனின் ஆய்வு வெளியே வந்தால் பல உயர் அதிகாரிகளும் அதில் சிக்கக்கூடும் என்கிற வகையில், அவனை மரணிக்க செய்ய, காவல்துறை பாணியில் சொன்னால் "போட்டுத்தள்ள" திட்டமிடுகிறார்கள். அ...