Posts

Showing posts from October, 2020

மதங்களை கடந்த மானுடம்

Image
      மலாலா..        மதங்களை கடந்த மானுடம் . அது மத நம்பிக்கைகளின்  அடிப்படையில்,பெண் அடிமைத்தனமும்,பெண்களின் கல்வி மறுப்பும்,பயங்கரவாதிகளின் துப்பாக்கி முனையில் அமலில் இருந்த நேரம்! பெண்கள் கல்விகற்க கூடாது! வீட்டை விட்டு வெளியே கூட வரமுடியாத நிலையில் அடக்குமுறைகள் இருந்த நேரம்.காலச்சக்கரத்தில் அதன் ஆண்டு 2009! "என்ன?2009ஆ!" என நம்மில் பலபேர் வியந்து போகலாம்!! ஆமாம்! இதுமாதிரியான அடக்குமுறைகளும் நெருக்கடியான சூழலும் இருந்த காலம் 2009தான்! இந்த அடக்குமுறைகள் நடந்தேறிய இடம் நமது "பெரியார் மண்ணில்"அல்ல! நமது இந்திய நாட்டிற்கு வடமேற்கே இருக்கும் பாகிஸ்தானில்,இன்னும் சரியாக சொன்னால்,பாக்-ஆப்கான் எல்லைப்பகுதியில் இருக்கக்கூடிய "ஸ்வாட்" எனும் பள்ளத்தாக்கில்தான் இது மாதிரியான அடக்குமுறைகள் 21வது நூற்றாண்டிலும் தொடர்ந்து இருந்து வந்தது! இந்த மாதிரியான சூழ்நிலையில் இருந்து,கல்வி எனது பிறப்புரிமை!அதை பறிக்க எந்த அமைப்புக்கும் உரிமை கிடையாது! என்று முழங்கி,இன்றும் பெண்கல்விக்காக தொடர்ந்து போராடிவரும் ஒரு மாணவியின் 13 வயது மாணவியின் சில பக்கங்ககளை புரட்ட...
Image
  அந்த முதல்நாள் முதல் அவளும் நானும்... பரிதவித்த பார்வை,அதற்கு பதிலளித்த பார்வை.அது திடமான அன்பில் நீக்கியது சோர்வை.. நெருக்கமான பேச்சோடு நெடுந்தூர பயணம். உருக்கமான மூச்சில் உண்மையான காதல்.அதன் மென்மையான ஊடலில் நம் தனிமைக்கான தேடல்.. பரிமாறிய பரிசுகளில் உருமாறிய காதல். உருமாறிய காதலால் உண்டாகவில்லை மோதல்... அவளை நானும் என்னை அவளும் மாறிமாறி சிந்திப்பது.... சிலிர்ப்பான சந்திப்பு சிலபோது சந்திப்பு,அதுவும் சில நேரம்தான் சந்திப்பு. உண்மை சொல்ல உளறல் இதுவும் அவ்வப்போது தொடரால்.. அவ்வப்போது கோபம் அவ்வப்போது சண்டை கண்டிப்பாக வேண்டியிருந்தது, நம் காதல் பன்பட.... அன்பான காதலால் வம்பான சில நட்புகளும் அன்பான நட்புகளால்,புது தெம்பான காதலும்... இவ்வளவுதான் இதுவரை அவளும் நானும்.... பகத்சிங்             ❤❤❤              25/10/2020
Image
  ஆயுதபூசை பற்றி அறிஞர் அண்ணா!' எலக்ட்ரிக், ரயில்வே, மோட்டார், கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் அதைக் கண்டுபிடிக்கும் கருவி, டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி, விஷப்-புகை, அதைத் தடுக்கும் முகமூடி, இன்ஜக்ஷன் ஊசி, இனாகுலேஷன் ஊசி, இவைகளுக்கான மருந்து ஆப்ரேஷன் ஆயுதங்கள், தூரதிருஷ்டிக் கண்ணாடி, ரேடியோ, கிராமபோன், டெலிபோன், தந்தி, கம்பியில்லாத் தந்தி, போட்டோ மெஷின், சினிமாப் படம் எடுக்கும் மெஷின், விமானம், ஆளில்லா விமானம், டைப் மெஷின், அச்சு யந்திரம், ரசாயன சாமான், புதிய உரம், புதிய விவசாயக் கருவி, சுரங்கத்துக்குள் போகக் கருவி, மலை-உச்சி ஏற மெஷின், சந்திரமண்டலம் வரை போக விமானம், அணுவைப் பிளக்கும் மெஷின், இன்னும் எண்ணற்ற புதிய பயன் தரும் மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகியவைகளைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், இன்னமும் கண்டுபிடிக்கும் வேலையிலே ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் சரஸ்வதி பூசை - ஆயுத பூசை கொண்டாடாதவர்கள். அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்ச...

அ

 இந்த சமூகத்தின் அவலங்களை எல்லாம் எழுதி தீர்க்க ஒரு முதல் அடியில்..