மதங்களை கடந்த மானுடம்

      மலாலா..

       மதங்களை கடந்த மானுடம்.


அது மத நம்பிக்கைகளின்  அடிப்படையில்,பெண் அடிமைத்தனமும்,பெண்களின் கல்வி மறுப்பும்,பயங்கரவாதிகளின் துப்பாக்கி முனையில் அமலில் இருந்த நேரம்! பெண்கள் கல்விகற்க கூடாது! வீட்டை விட்டு வெளியே கூட வரமுடியாத நிலையில் அடக்குமுறைகள் இருந்த நேரம்.காலச்சக்கரத்தில் அதன் ஆண்டு 2009!


"என்ன?2009ஆ!" என நம்மில் பலபேர் வியந்து போகலாம்!! ஆமாம்! இதுமாதிரியான அடக்குமுறைகளும் நெருக்கடியான சூழலும் இருந்த காலம் 2009தான்! இந்த அடக்குமுறைகள் நடந்தேறிய இடம் நமது "பெரியார் மண்ணில்"அல்ல! நமது இந்திய நாட்டிற்கு வடமேற்கே இருக்கும் பாகிஸ்தானில்,இன்னும் சரியாக சொன்னால்,பாக்-ஆப்கான் எல்லைப்பகுதியில் இருக்கக்கூடிய "ஸ்வாட்" எனும் பள்ளத்தாக்கில்தான் இது மாதிரியான அடக்குமுறைகள் 21வது நூற்றாண்டிலும் தொடர்ந்து இருந்து வந்தது! இந்த மாதிரியான சூழ்நிலையில் இருந்து,கல்வி எனது பிறப்புரிமை!அதை பறிக்க எந்த அமைப்புக்கும் உரிமை கிடையாது! என்று முழங்கி,இன்றும் பெண்கல்விக்காக தொடர்ந்து போராடிவரும் ஒரு மாணவியின் 13 வயது மாணவியின் சில பக்கங்ககளை புரட்டுவோம் வாருங்கள்!!


       உலகெங்கிலும் போராளி குழுக்கள் தலைதூக்கி கொண்டிருந்த நேரம்.கொள்கையின் அடிப்படையிலும்,அவர்களின் கோரிக்கைகளின் அடிப்படையிலும்தான் அவை போராளிக்குழுக்களா? அல்லது பயங்கரவாத இயக்கமா? என்பதை புரிந்துவைத்திருக்க வேண்டும்!


சரி,நாம் கட்டுரைக்குள் வருவோம்.

பாகிஸ்தானின் "ஸ்வாட்" பள்ளத்தாக்கின் தாலிபான்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்த நேரம்! அப்போது பெண் பிள்ளைகள் கல்வி கற்ககூடாது வீட்டைவிட்டுகூட  வெளியே வரக்கூடாது என்பது மாதிரியான கடுமையான அடக்குமுறைகள் அமலில் இருந்தது.இந்த கட்டுப்பாடுகளை விதித்து,மக்களை அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கி வைத்திருந்தது தாலிபான்கள் என்கிற துப்பாக்கி ஏந்திய அமைப்பு.இந்த கட்டுப்பாடுகளை மீறினாலோ அல்லது கடைபிடிக்க தவறினாலோ தாலிபான்களின் பதிலடி என்பது வெறும் "அடியாக" இருக்காது! அது "வெடி குண்டுகளாய்" வெடித்து சிதறும்! ஆமாம்! அதிகபட்சமாய் சுட்டுக்கொன்றுவிடுவார்கள்! இந்த மாதிரியான அச்சுறுத்தல்களுக்கு பயந்தும்,தங்கள் பிள்ளைகளின் எதிர்காலங்களை கருத்தில்கொண்டும் பல குடும்பங்கள் ஸ்வாட் பகுதியிருந்து வெளியேறி பாகிஸ்தானின் வேறு நகரங்களுக்கு சென்றுவிடுகின்றனர்! வாழ்ந்த இடத்தை விட்டுசெல்ல மனமில்லாத சில குடும்பங்கள் மட்டும் அங்கேயே தங்கிவிடுகின்றன.அப்படி தங்கிய குடும்பங்களில் ஒன்று கவிஞர்  "ஜியாவுதீன் யூசப்சாய்"அவர்களின் குடும்பம்.இவர் தனது 13 வயது மகளுக்கு ஈரானிய கவிஞர் மலாலாவின் பெயரை சூட்டியிருந்தார்!


               கல்வியில் ஆர்வமும்,அதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்திருந்த  மலாலாவுக்கு, தனது மேற்படிப்பை தொடர தாலிபாக்களின் கட்டமைப்பு தடையாக இருந்தது! தாலிபான்களின் இந்த கட்டமைப்பின் மீது வெறுப்பு ஏற்படுகிறது. தாலிபான்களின் அடிப்படை கோட்பாடுகளை தன் தந்தையின் மூலமாக கேட்டு அறிந்துகொள்கிறார் மலாலா! அவர் சொன்ன செய்திகளை கேட்டபின்னர்,மென்மேலும் கோபத்தின் உட்ச்சத்திற்கே சென்றுவிடுகிறார்! புரட்சி பூக்க தொடங்கிய நேரமது!


ஒருநாள் தன் தந்தையுடன்  "பெசாவர்" என்கிற நகருக்கு செல்கிறார்.(உலக ஊடகங்கள் எப்போதும் பாகிஸ்தானில் வலம்வருவது வழக்கம்).அப்போது, அங்கு குழுமியிருந்த ஊடக கூட்டத்திற்கு முன்னால்,தனது கோபத்தை பெரும்கூச்சலாய் வெளிப்படுத்துகிறார். "கல்வி என்பது எனது உரிமை! அதை பறிக்கவோ தடுக்கவோ எந்த அமைப்பிற்கும் உரிமை கிடையாது! கல்வி உரிமையை பறிக்க தாலிபான்களுக்கு யார் அனுமதி கொடுத்தது? இந்த மாதிரியான அடக்குமுறைகளைக்கண்டு நாம் மௌனமாக இருக்கக்கூடாது. இதனை எதிர்த்து நாம் போராட வேண்டும்" என மெத்த உரைக்கிறார்!


                                            ஊமைகளின் குரலாய்

                                            ஊர்க்காரி ஒருத்தி

                                            ஊர் அதிர பேசவிட, 

                                           ஊர்க்காதுகள்  அனைத்தும்(Media) 

                                           ஊர்ந்து வந்தன சேர்ந்தன

                                           ஊரெல்லாம் கொண்டுசேர்க்க!                                                  

     என்பதைப்போல ஊர்க்காதுகள் அனைத்தும் மலாலாவை சுற்றிக்கொண்டன.

பல ஊடகங்கள் இதை செய்திகளாக வெளியிட்டன.இதை இங்கிலாந்தின் பிரபல செய்தி நிறுவனமான BBCக்கு தங்கள் பகுதியில் நடைபெரும் தாலிபான்களின் தாக்குதல்களையும்,அதன் இயக்கங்களையும் "குல்மகாய்" என்கிற மாற்றுப்பெயரில் உருது மொழியில் தொடராக கட்டுரைகளை எழுதி அனுப்புகிறார்! இதன் மூலம் தாலிபான்களின் அடக்குமுறைகளை உலகறிய செய்கிறார்! யாவரும் கல்வி கற்க கூடாது என்பதற்காக பல பள்ளிக்கூடங்களை வெடிகுண்டுகளை வைத்து தகர்த்த செய்திகளையும் உலகிற்கு வெளிக்கொணர்கிறார்! 

"பாகிஸ்தான் அதிபரின் மகள் இந்த ஸ்வாட் பள்ளத்தாக்கில் இருக்கும் பள்ளிக்கூடத்தில் படித்து, இந்த மாதிரியான அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டால்,பாகிஸ்தான் ராணுவம் எப்போதும் போல வேடிக்கை பார்க்குமா?" என்று அரசை சூசகமாக சாடிவிடுகிறார்! இந்த கட்டுரைகள் லட்ச கணக்கான வாசகர்களிடம் போய் சேர்கிறது! கூடவே "புரட்சி மங்கையாய்" போய் சேர்கிறார் மலாலா.அமெரிக்க ஊடகம் ஒன்று மலாலாவை பற்றி ஒரு ஆவணப்படம் வெளியிட்டது! சர்வதேசங்களில் இருந்து மலாலாவுக்கு விருதுகளும்,ஆதரவு குரல்களும் குவிகின்றன.பாக்.அரசு அந்நாட்டின் சார்பில் "தேசிய குழந்தைகள் அமைதி விருது" ஒன்றை அளிக்கிறது!


ஒருபக்கம் தாலிபான்கள் இதையெல்லாம் கவனித்துக்கொண்டே வருகின்றனர்! தங்களின் அடக்குமுறைகளை மீறி அவர் கல்விகற்பதை தாலிபான்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.அமெரிக்க,பாக் ராணுவத்துடனேயே சண்டை செய்யும் தாலிபான்களுக்கு மலாலா என்பவர் ஒரு துரும்புதான்! தாலிபான்களின் துப்பாக்கி மலாலாவை குறிவைக்க தொடங்குகிறது!


2012 நவம்பரில் பள்ளிக்கு சென்று திரும்பும்போது,தாலிபான்களால் சரமாரியாக சுடப்படுகிறார்! அரை உயிரோடு போராடிக்கொண்டிருக்கும் மலாலாவை, பாக். ராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன் "ராவல்பிண்டி"எனும் இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு,சிகிச்சை அளிக்கப்படுகிறது!

மலாலா சுடப்பட்ட செய்தி உலகமெங்கும் பரவுகிறது! உலகெங்கிலும் மலாலாவுக்கு ஆதரவு குரல்கள் ஒலிக்கின்றன.


பின்பு பிரித்தானியாவின் அரசு சார்பில் "பர்மிங்காம்" நகரில் இருக்கும் ராணி எலிசபெத் மருத்துவமனையில்,மலாலாவுக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு, மூன்று மாதங்கள் கழித்து குணமடைகிறார் மலாலா!

மலாலாவின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும்,கல்வி முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும்,பிரித்தானிய அரசு மலாலாவின் தந்தைக்கு அந்நாட்டில் வேலை வழங்கி ஆதரவு அளிக்கிறது! இதனால் மலாலாவால் அங்கேயே கல்வி பயில முடிந்தது!


பிறகு என்ன,ஐநா அழைக்கிறது! இனி வரும் காலங்களில், மலாலாவின் பிறந்த நாளான ஜூலை 12 ம் நாளை, "மலாலா தினமாக" ஐநா அறிவிக்கின்றது! மேலும்,கல்வி உரிமைக்காக பாடுபடும் குழந்தைகளுக்கு, மலாலாவின் பெயரில் விருது வழங்கப்படும் எனவும் அறிவிக்கின்றது! இதனையடுத்து, 2013 ஜூலை 15 அன்று, ஐநாவில் வரலாற்று சிறப்புமிக்க உரையாறுகிறார்!

                                                        'மலாலா உரை'

                        தாலிபான்கள் என்னை சுட்டுவிடலாம்!ஆனால் என் கனவுகளை ஒருபோதும் சுட்டுவிட முடியாது! எனது உண்மையான நோக்கமென்பது,ஒவ்வொரு பெண் குழந்தையும் கல்வி கற்க வேண்டும் என்பதுதான்! கல்வியின்மை,தீவிரவாதம் இவற்றிற்கு எதிரான நாம் போர் புரிய வேண்டும்! அதற்கு புத்தகமும்,பேனாவும் மட்டுமே ஆயுதமாக இருக்க வேண்டும்! என்று உரை நிகழ்த்துகிறார்!!

                                             மலாலா பெற்ற விருதுகள்!

அயர்லாந்து அரசின் 2012 ம் ஆண்டுக்கான சர்வதேச அமைதி விருதை அறிவிக்கின்றது.பிறகு அமைதிக்கான நோபல் பரிசையும் பெறுகிறார் ! ஐரோப்பிய யூனியன் சார்பில் உயரிய மனித உரிமை விருது வழங்கப்படுகிறது! நெதர்லாந்து நாட்டின் சர்வதேச அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்படுகிறது! 



இறுதியாக..


பெண்களின் சக்தி அபாரமானது என்பதையும்,உலகின் வளர்ச்சிக்கு பங்களிப்பு இன்றியமையாதது என்பதையும்,மலாலா என்கிற பெண்மணி மூலமாக நாம் அறிந்துகொள்ள முடிகிறது! உலகில் எங்கோ ஒரு மூலையில் இன்னமும் பெண் கல்வி மறுப்பு அமலில் இருக்கிறது! கல்வியின் அவசியத்தை உணரும்போது இன்னும் நூற்றுக்கணக்கான மலாலாக்கள் தோன்றுவார்கள்! எல்லா பெண்களும் தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராட வேண்டும்! குறைந்த பட்சம், வீட்டிலாவது தங்கள் உரிமைகளையும் சமதர்மங்களையும் பற்றி விவாதிக்க வேண்டும்!


சினிமா,பொழுதுபோக்கு,விளையாட்டு போன்றவற்றில் காட்டப்படும் விளம்பரதன்மையான பெண்களையும், போலியான முகப்பூச்சுகளையும் தவிர்த்து, "மலாலா" மாதிரியான பெண்களை தங்களின் 'Inspiration' ஆகவும், 'Role Model' ஆக வைத்துக்கொள்வோம்!

வாழ்க சனநாயகம்! சமத்துவம்!!


                                                                                S.பகத்சிங்

                                                                     28.10.2020

e-mail- sbhagath6@gmail.com 

Comments

Post a Comment

Popular posts from this blog

மரப்பயணம்

திருமா திமுகவுடன் தான் இருப்பார்!!

அறம்