மரப்பயணம்

அந்த மரம்

ஆறு பெருங் கிளைகளைக்

கொண்டிருந்தது!


அன்று

சிறுவர்களாய்

இருந்த நாங்கள்

ஏறி விளையாடும் அற்புத மரம்!


ஒரு கிளையில்

விமானப்பயணம்

ஒரு கிளையில்

கப்பல் பயணம்

ஒரு கிளையில்

பேருந்து பயணம் என

எங்கள் சுற்றுப்பயணங்கள்

அனைத்தும்

அந்த மரத்தைச் சுற்றியே

அமைந்திருக்கும்!


விடுமுறை தினங்களில் 

நிரம்பும்

போக்குவரத்து வாகனங்களைப் போல மரமும் நிரம்பிக் கொள்ளும்  மாணவராகிய எங்களால்!


எங்கள் கால் தடம் படுவதால்

கட்டெறும்பு சிற்றெறும்பு

என எதுவும் ஏறாது!!


பின்பொருநாளில்

அந்த மரத்தை 

மகளின் கல்யாணத்தில்

சமைக்க

விறகுக்காக வெட்டி

வீழ்த்தினார் அந்த மரத்துக்காரர்!


வேரோடு சாய்ந்தது மரம் மட்டுமல்ல!

எங்கள் மகிழ்வான நினைவுகளும் தான்!


#பகத்சிங்



Comments

Post a Comment

Popular posts from this blog

திருமா திமுகவுடன் தான் இருப்பார்!!

அறம்