காட்டு முள்ளில் பிஞ்சுப்பூக்கள்
பள்ளி விடுமுறையான அது ஒரு கோடைகால முற்பகலில் துவங்கிய எங்கள் பயணம்.. தரிசு நிலங்களைத் தங்க வயல்போல் காட்சி கொடுக்கும் சீவுப்பத்தைகளின் உவாம் பழ முட்களுக்கு மத்தியில் ஊடுருவும் பயணம்.. சுண்டு விரல் நீல மொத்த சுருட்டைப் பாம்பு வீரியமிக்க விஷமுள்ள விரியன் பாம்பு கண்ணை கொத்தும் கண்கொத்திப் பாம்புகள் கடந்து வெட்ட வெளியில் செல்வோம் வெறுங்காலில் செல்வோம்! கல்லோடு கல்லாய் முள்ளோடு முள்ளாய் மூன்று நான்கு என கிடைக்கும் கௌதாரி முட்டைகளை கையில் எடுப்போம்! 'எடுத்துப்போய்க் கொண்டே இருப்போம்' எனவும் சொல்லலாம்.. கையில் வைத்தால் நசுங்கிவிடும். பையில் வைத்தால் உடைந்து விடும் . உடை முட்டையின் புடை நாற்றத்தில் ஊளையிடும் நரிகள் ஒன்று சேர்ந்து நம்மை ஒன்றுமில்லாமல் ஆக்க நேரும்! காற்றில் பறந்து காட்டுக்குள் வந்திருக்கும் கள்ள சாராய பையை எடுத்து தைல மர இலைகளை போட்டு முட்டைகளை அதன் உள்ளே வைப்போம்! என்னையும் அழைத்துச் செல் என்று அடம் பிடித்த எதிர்த்த வீட்டு சிறுவனின் கையில் அதை கொடுத்து எடுத்து வர சொல்வோம்... கா...