Posts

திருமா திமுகவுடன் தான் இருப்பார்!!

Image
   புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆனந்த விகடன் வெளியிட்ட ' எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' எனும் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தவெக தலைவரும் நடிகருமான விஜய் அவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு கூட்டணி கட்சிகளின் அழுத்தம் இருப்பதாக சொல்லிவிட்டு, திருமா திமுகவின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதைப் போல பேசினார்! முதலில் அதற்கு வன்மையான கண்டனங்களை பதிவு செய்கின்றோம்!  அதற்கும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தலைவர் திரு திரு. திருமா அவர்கள், "அழுத்தம் கொடுத்து இணங்கக் கூடிய அளவிற்கு நானும் விடுதலைச் சிறுத்தைகளோ பலவீனமாக இல்லை" என்று பதிலடி கொடுத்தார்.  இது பற்றி நம்முடைய பார்வையை உங்கள் முன் எடுத்துரைக்கிறோம்.  முதலில், 'திருமா அவர்கள் திமுக கூட்டணியில் தான் இருப்பார். திமுக கூட்டணியில் தான் இருக்க வேண்டும்' என்பதுதான் சரியான வாதமாகும்.  ஏனென்றால்,ஆரம்ப காலத்தில் தலித் மக்களின் குரலாக அறியப்பட்டு, இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் குரலாக ஒலித்துக் கொண...

அறம்

Image
1.சமரசக்கொடி கொள்கைப் பேசி கூட்டம் சேர்க்க  நீங்கள் நீட்டிப் பிடிக்கும் கொடிகளின்  நிறங்கள் வெவ்வேறு..... கொள்கையை பிரதிபலிக்க வேண்டிய கொடியின் நிறங்கள்  சில நேரங்களில் சிலருக்காக வெள்ளைக் கொடிகளாகிப்போவதென்ன வேடிக்கை?! 2.அரசு நமக்கானது . இறந்த பின்பு அரசு மரியாதையெல்லாம் கிடைக்க வேண்டாம், இருக்கும்போது அரசு மருத்துவமனையில்  கொஞ்சம் மரியாதை கிடைத்தால் போதும்! 3. தீண்டும் ஆமை ஒரே கடையில்  அதே விலையில் நேற்று  நான் குடித்த  குவளையில் நீயும்  நீ குடித்த  குவளையில் நானும்  அருந்தும் தேநீரில்  உனக்கு மட்டும் என்ன மூல வியாதி மருந்து கலந்தா கொடுக்கிறார்கள்? உட்கார்ந்து குடிக்க மறுக்கிறாயே என் அருகில்.... 4.ஒரு காதல் கதை  எனக்கு பிடித்த எல்லாமும்  உனக்கு பிடிக்கத் தேவையில்லை.. உனக்கு பிடித்த எல்லாமும் சில நேரங்களில் எனக்கும் பிடிப்பதில்லை... ஆனால், நீயும் நானும்  ஒன்றாகவே இருக்கின்றோம், ஒரு முட்டைக்குள்  மஞ்சள் கரு வெள்ளை கருவைப் போல..... 5.ஆறறிவு விலங்கு. மதத்துக்குள் அடங்கும் கடவுளால் கூட மதங்கொண்ட யானையை அடக்க முடிவதி...

காட்டு முள்ளில் பிஞ்சுப்பூக்கள்

Image
  பள்ளி விடுமுறையான அது ஒரு கோடைகால முற்பகலில்  துவங்கிய எங்கள் பயணம்.. தரிசு நிலங்களைத் தங்க வயல்போல்  காட்சி கொடுக்கும் சீவுப்பத்தைகளின்  உவாம் பழ முட்களுக்கு மத்தியில்  ஊடுருவும் பயணம்.. சுண்டு விரல் நீல மொத்த  சுருட்டைப் பாம்பு வீரியமிக்க விஷமுள்ள  விரியன் பாம்பு கண்ணை கொத்தும் கண்கொத்திப் பாம்புகள் கடந்து  வெட்ட வெளியில் செல்வோம் வெறுங்காலில் செல்வோம்! கல்லோடு கல்லாய் முள்ளோடு முள்ளாய்  மூன்று நான்கு என கிடைக்கும்  கௌதாரி முட்டைகளை கையில் எடுப்போம்! 'எடுத்துப்போய்க் கொண்டே இருப்போம்' எனவும் சொல்லலாம்.. கையில் வைத்தால் நசுங்கிவிடும். பையில் வைத்தால் உடைந்து விடும் . உடை முட்டையின் புடை நாற்றத்தில் ஊளையிடும் நரிகள் ஒன்று சேர்ந்து  நம்மை ஒன்றுமில்லாமல் ஆக்க நேரும்! காற்றில் பறந்து காட்டுக்குள் வந்திருக்கும் கள்ள சாராய பையை எடுத்து  தைல மர இலைகளை போட்டு  முட்டைகளை அதன் உள்ளே வைப்போம்! என்னையும் அழைத்துச் செல் என்று அடம் பிடித்த   எதிர்த்த வீட்டு சிறுவனின்  கையில் அதை கொடுத்து  எடுத்து வர சொல்வோம்... கா...

மண்ணியல்

Image
ஆடி கடைசி வெள்ளி. கிடா வெட்டி  கோழி அறுத்து அம்மனுக்கும் அய்யனாருக்கும் முனியனுக்கும் கருப்பனுக்கும்  படையல் போட  ஆசீர்வதிக்கப்பட்ட நாள் ! சிற்றூர்களில் இருக்கும் சிறு தெய்வங்கள்  நம்மைக் காக்க  நம் ஊருக்கே வந்திருப்பதாய்  நம்பும் எளிய மக்கள் கொண்டாடும் நாள்!! சாதிக்கு ஒரு சாமி கூட்டத்திற்கு ஒரு தெய்வம் குலதெய்வம்! ஒரு வகையில்  சாதிச் சண்டை வருவதற்கும் சாமிகளே காரணம்! உழைப்பதற்காக  வெளியூர் சென்ற  ஊர்க்காரர்கள் எல்லோரையும் ஊருக்கு அழைத்து வந்திருக்கும்  உன்னதமான நாள்! சாதி ஒழிப்பு  சாமி எதிர்ப்பு பேசினாலும் "வருடத்தில் ஒரு நாள்  கோவிலில் சாப்பிடுவது தப்பில்லை... வா போகலாம்" என்று  வாஞ்சையோடு அழைக்கும் அன்பிற்கும் அசைவப் பிரியர்களுக்கும்  அர்ப்பணிக்கப்பட்ட நாள்! #பகத்சிங் 

நீதி சொல்லுங்க...

Image
 1.அடங்கமறு நாவடக்கம் தேவை என்பார்கள் நல்லொழுக்கம் போதிப்போர். நெறிக்கப்படும் குரல்வளையில்  நசுக்கப்பட்டவனின் நாக்கு  என்னுடையது!! நாக்கை அடக்கிக்கொள்வது  என்னை நசுக்குபவனுக்கு  அடங்கிப் போவதாய் அர்த்தம்! அதிகாரத்துக்கு எதிராய்  போவதுதான் என் போக்கு... நசுக்குபவனுக்கு எதிராய் எப்போதும் நீளும் என் நாக்கு! 2. பெருமை பொதுவாக எதற்கும்  பெருமைப்பட்டுக்கொள்வதில்லை! பொதுவான இடங்களில் வைத்து பெருமைப்படுத்துகிறார்கள், பெருமைக்குரிய பெருமக்கள்! பெருமைப்படுத்தும் பெருந்தன்மைக்கு நன்றி! நான்  பொதுவாக எதற்கும் பெருமைப்பட்டுக்கொள்வதில்லை.. 3.பலிகிடாய் எங்களவன் ஒருவனைத் தூண்டி  எங்களுக்கெதிராய் நிறுத்தி, நிற்பவனின் கரங்களில் அறிவாளை கொடுக்கும் ஆண்டை, அவன் கைகளுக்கு பேனா மட்டும் கிடைக்காமல் பார்த்துக்கொள்கிறான். 4. தனித்தொகுதி . மூனு ஊரு... மூனு தெரு... மூணு ஊருக்கும்  மூனு சாதி  பெருஞ்சாதி! இந்த மூனு ஊர்லயும் இருக்கு எங்க சாதி! மூனு ஊரும் ஒரே ஊராட்சி.. ஊராட்சி எலக்சன் பொதுவுல வந்தா ஊருக்கு ஒருத்தன்தான்  பொதுவுல நிப்பான்! "சாதிக்கு ஒருத்தன்"தா...

புனிதம் அல்ல, புரிதல்!!

Image
  1- தொலைந்துபோ தூரமே. ' 300 கிலோமீட்டருக்கு அந்தப் பக்கம் இருக்கும் உனக்காக என்னால்  வெறும்  30 நொடி Statusதான் வைக்க முடிகிறது! 30MB யில் Speed கிடைத்தால் தான் முகம் பார்த்தே பேச முடிகிறது! 30 நிமிட உணவு இடைவெளியில் வெறும் மூன்று நிமிடம் தான் பேச முடிகிறது! மூன்று முடிச்சுக்காக காத்திருக்கும் உன்னிடம் நான் எப்படி முற்போக்கு பேசுவது? 2- மலக் காதல் அடிப்பாவி! என்னை பிடிக்கும், என் சாதியை பிடிக்காது என்கிறாய்! எனக்கும் சாதி பிடிக்காது! உனக்கு என் சாதி பிடிக்காது! எனக்கு எந்த சாதியும் பிடிக்காது! 3- internet காதல் அப்போதெல்லாம் காதலில் இணைய நிறைய தேவைகள்! நண்பர் தோழி தூதுகள்! காத்திருத்தல் அலைந்திருத்தல் பாத்திருத்தல் தேவை! இப்போது தேவை 'இணைய' சேவை! 4-நேர்மை எவருக்காகவும் காதலிப்பதை மறைக்க வேண்டியதுமில்லை! எல்லோரிடமும் காதலிப்பதை சொல்ல வேண்டியதுமில்லை!! 5-அதில் நான் சிறந்தவன் எந்த பெண்ணிடம் காதலைச் சொன்னாலும் 'என்னவனுக்கு முன்பாக உன்னை கண்டிருக்க வேண்டும்' என்கிறார்கள்! எனக்கு முன்னவே அவன்  அதிகம் பொய் சொல்லியிருக்கிறான் போல! 6-உழல்தல் எப்படி தனியாகவே இருக்கிறாய்! என்...

ஈழம் வெல்லும்! அதை காலம் சொல்லும்!!

Image
  சிங்களவன் பொழிந்த குண்டு மழையில் குளித்து ரத்த வெள்ளத்தில் குவிந்த எங்களவர் பிணங்களை எண்ணி பார்க்கின்றோம்.. எள்ளளவும் பயமில்லை! எஞ்சியிருப்பது வீரமும் எங்களவனின் முகமும்தான்! #may18 முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நாள் வீரவணக்கம்!!