Posts

Showing posts from November, 2020

திரைப்படம் காட்டும் பெண்ணியம்.

Image
வணக்கம் நண்பர்களே! புதிதாக எதையாவது எழுத வேண்டும் என்கிற நோக்கில், பார்வையை சற்று வித்தியாசப் படுத்தி பார்க்கலாம்! என்கிற கோணத்தில் நம்மில் பலரின் நேரத்தில் ஒரு பகுதியையும்,நம் சிந்தனைகளின் பெரும்பகுதியையும் திருடிக்கொண்டிருக்கும் சினிமாவில்,குறிப்பாக திரைமொழியில் பெண்கள் எவ்வாறு காட்சிப்பொருளாக,வணிகப்பொருளாக  காண்பிக்கப்படுகிறார்கள், என்பதை எழுதியிருக்கிறேன்! சொல்லப்போனால்,சினிமா என்பது 'கேளிக்கை,பொழுதுபோக்கு' என்பதை தாண்டி, இங்கே என்ன மாதிரியான  உளவியல் பார்வையை நம்மிடையே உருவாக்கி இருக்கிறது என்பதை இங்கே நாம் பேச வேண்டி இருக்கிறது! சினிமாவிலும்,சின்னத்திரை விளம்பரங்களிலும் பெண்களை காட்சி பொருளாக மையப்படுத்தி,வணிக ரீதியிலான லாபத்தை அடைந்துகொள்கின்றனர். திரைகள் முழுவதும் பெண்கள் மயமாகி இருக்கிற போதிலும்,பொதுவெளியில் இன்றுவரை பெண்களால் பாதுகாப்பாக இருக்க முடிகிறதா? யாரரெல்லாம் குற்றவாளிகள்? இதைப்பற்றி பலரும் பேசி வருகின்றனர்.என்றாலும், பெண்களின் பாதுகாப்பின்மைக்கு சினிமா ஒரு முக்கியமான 'மறைமுக காரணி' என்பதே எனது வாதம...