Posts

Showing posts from September, 2022

நட்சத்திரம் மிளிர்கிறது

Image
இது பா ரஞ்சித் அவர்களின் ஆறாவது படம். கடந்த படங்களில் தான் பேசிவந்த அரசியலை வேறு ஒரு திரைமொழியில் தவிர்க்க முடியாத விவாதமாகவும், தவிர்க்க முடியாத திரைப்படமாகவும் எடுத்துக்காட்டியுள்ளார் பா ரஞ்சித். காதலும் காதலுக்கு பின்னால் தடையாக.....இல்லை, காதலுக்கு முன்னால் தடையாக வந்து நிற்கும் சாதியையும், அதோடு பின்னிப்பிணைந்த அரசியலையும் எடுத்துரைத்துள்ளார். "ஒரு நாடகக்குழு, காதலை மையமாக வைத்து ஒரு நாடகம் எடுக்க முயற்சிக்கிறார்கள். அதில் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த ஒரு பெண்ணும், இடைநிலை சாதியில் பிறந்த ஒரு ஆணும் காதலித்து, கடைசியில் இருவரும் திருமணம் செய்துகொள்வதுதான் கதை. பல தடைகளைத்தாண்டி அவர்கள் ஒன்றிணைய நாடகம் முடிகிறது."காதில் விசத்தை ஊற்றி கொலை செய்யப்பட்ட கண்ணகி-முருகேசன் இணையாரின் ஆணவக்கொலை, ரயில் தண்டவாளத்தில் வெட்டி வீசப்பட்டு தற்கொலையாக மாற்றப்பட்ட இளவரசனின் ஆணவக்கொலை, என சாதி இந்துக்களால் செய்யப்பட்ட ஆணவக் கொலைகளையும் அதற்கு பின்னால் இருக்கும் சாதி வெறி அரசியலையும் திரையில் காண்பித்துள்ளார். அப்படி காண்பித்த போதிலும், "ஆணவக்கொலைகளை செய்த சமூகத்தினர், விடுதலைச் சிறுத்த...