Posts

Showing posts from October, 2022

சதியாட்டம் .

Image
" பல்க்கு ஏறவுட்டு , ரெண்டு Attempt போடட்டும் …. அவன் போனஸ் போட Try பண்ணுனா , மண்டைய போட்டு அடிச்சிரு ! இவன் மண்டைய போட்டதும் , எவனாவது வந்து ஆங்கிள் எடுத்துருங்க . அப்பதான் நிப்பாட்ட முடியும் !.. மூணு Attempt க்கு மேல Try பண்ணாதிங்க ... ஒருத்தன் அடிச்சா எல்லாரும் மேல உழுந்து ஆள அமுக்கிருங்க ." இதெல்லாம் அடுத்த வாரம் நடக்கவுள்ள மாவட்ட கபடி அணி தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் கனியமுதனுக்கு மாலை நேர கபடி பயிற்சியில் , தாத்தா மருதையன் சொல்லி கொடுக்கும் விளையாட்டு உத்திகள் . காலைநேர கல்லூரி முடிந்ததும் , வீட்டுக்கு வந்து சாப்பிட்டு தூங்கி , மாலை ஆனதும் கூத்தங்காளி கோவில் திடலுக்கு எல்லா பசங்களும் வந்து சேரனும் . கபடி ஆடும் எல்லோருக்கும் மருதையன் தாத்தா அங்கே பயிற்சி அளித்துக்கொண்டிருப்பார் .   ' மருதையன் '. 80- களில் இவர் ஆடிய கபடி ஆட்டம்தான்   90- களின் இறுதியில் இவருக்கு அரசு வேலையை வாங்கிக்கொடுத்தது ! மாநில அளவில் கபடி ஆடியவர் . தஞ்சை டெல்டா பகுதிகளிலும் சரி , கந்தர்வக்கோட்டை பகுதி...