சதியாட்டம் .
"பல்க்கு ஏறவுட்டு, ரெண்டு Attempt போடட்டும்…. அவன் போனஸ்
போட Try பண்ணுனா, மண்டைய போட்டு அடிச்சிரு! இவன் மண்டைய போட்டதும், எவனாவது வந்து ஆங்கிள் எடுத்துருங்க. அப்பதான் நிப்பாட்ட முடியும்!.. மூணு Attempt க்கு மேல Try பண்ணாதிங்க...ஒருத்தன் அடிச்சா எல்லாரும் மேல உழுந்து ஆள அமுக்கிருங்க."
இதெல்லாம் அடுத்த
வாரம் நடக்கவுள்ள மாவட்ட கபடி அணி தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் கனியமுதனுக்கு மாலை நேர கபடி பயிற்சியில், தாத்தா மருதையன் சொல்லி கொடுக்கும் விளையாட்டு உத்திகள்.
காலைநேர கல்லூரி முடிந்ததும், வீட்டுக்கு வந்து சாப்பிட்டு தூங்கி, மாலை ஆனதும் கூத்தங்காளி கோவில் திடலுக்கு எல்லா பசங்களும் வந்து சேரனும். கபடி ஆடும் எல்லோருக்கும் மருதையன்
தாத்தா
அங்கே பயிற்சி அளித்துக்கொண்டிருப்பார்.
'மருதையன்'. 80-களில் இவர் ஆடிய கபடி ஆட்டம்தான் 90-களின் இறுதியில்
இவருக்கு அரசு வேலையை வாங்கிக்கொடுத்தது! மாநில அளவில் கபடி ஆடியவர். தஞ்சை டெல்டா பகுதிகளிலும் சரி, கந்தர்வக்கோட்டை பகுதிகளிலும் சரி, இவர் பெயரை சொன்னால், தெரியாத ஊரே கிடையாது! இன்றைக்கும் கனியமுதன்
ஊர்
அணியினர் எங்கு போய் அணியின் பெயரை பதிவு செய்தாலும், 'மருதையன் ஊரா?..எப்படி இருக்காரு அவரு?' என்று
கேட்பார்கள்! தங்கள் பகுதிகளில் நடக்கும் கபடி போட்டி நடக்கும் இடங்களுக்கு இவர் சென்றால், பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்படும்போது, சாதி
அடக்குமுறைகளை கடந்து இவர் பெயர் கொடிகட்டி பறந்தகாலம் ஒன்று இருந்தது என்பதை
நினைவு கூர்வதைப்போல அமையும்! ஒருமுறை ஊரின் குடியானத்தெரு அணிக்காக வடுவூர் பக்கம் கபடி விளையாட செல்லும்போது, இவர் ஆட்டத்தில் மயங்கிய அந்த ஊர் தலைவரின் மகள் இவரோடு வருவதாக சொன்னாளாம்! சாதி ப் பற்றினால் உள்ளூர்காரர்கள் உதவி செய்யாமல் போக, வீரத்தால் முளைத்த காதல் அன்று விளையாமல் போனது!இவரை நம்பி களம் இறங்கிய அணியினர் இவருக்கே உதவவில்லை! அதன்பிறகு அரசுப்பணியெல்லாம் முடிந்து, ஓய்வுபெற்று, பேரப்பிள்ளை தூக்கிவிட்டார்! இன்று
ஊரில் இருக்கும் இளைஞர்களுக்கு கபடி சொல்லிக்கொடுத்து வருகிறார்!
கனியமுதனை தனது கபடி வாரிசாகவே நினைத்து சொல்லிக்கொடுக்கிறார்!.
கனியமுதன் அப்பா வின்னரசன்
தீவிர
அரசியல்வாதி.
“வடமொழி பெயர்களை கலைத்து நாம் அனைவரும் தமிழ் பெயர்களை சூட்டிக் கொள்வோம்”, என தன் தலைவர் அறிவித்ததையடுத்து கருணாகரண் என்கிற தன் இயற்பெயரை வின்னரசன்
ஆக மாற்றிக் கொண்டவர். முன்பொரு காலத்தில் மருதையன்-
வின்னரசன் ஆகியோரின் இரு குடும்பத்திற்கும் பயங்கரமான பகை நிலவியது. இரு குடும்ப சண்டை பல குடும்பங்களை பிரித்தது. பின்பு ஒரு காலத்தில் பங்காளிகள்
தங்களுக்குள்
பகைமையெல்லாம்
கலைத்து
பெரம்பூர் வீரமாகாளி அம்மன் கோவிலில் திருநீறு பூசி “முறைப்பாடு” தீர்த்த பின்புதான் அனைத்து பங்காளிகளும் மீண்டும் அன்னோன்யமானார்கள்.
கனியமுதன். மாவட்ட
போட்டிக்கு தேவையான 20 வயதுக்குட்பட்டு இருக்க வேண்டும். எடை 60 கிலோ இருக்க வேண்டும். உள்ளிட்ட அனைத்து தகுதியுடைவனாக
களம்
காண
காத்திருக்கிறான்!
திறமையான விளையாட்டு வீரரும் கூட. கல்லூரி அணி, பள்ளி அணி இவைமட்டுமில்லாமல் ஊரிலும் தவிர்க்க முடியாத முக்கியமான வீரன் இவன்.
மாவட்ட அணியில்
இடம் பெற்று விட்டால் மாவட்டம் முழுவதும் அறியப்படும் வீரனாக வந்துவிடுவான். இவனை எப்படியாவது மாவட்ட அணிக்குள் இடம்பெற செய்ய வேண்டும்
என்பதே மருதையனின் ஒரே எண்ணம்..
தேர்வுக்கு இரண்டு நாளுக்கு முன்பாக வழக்கம்போல் மாலை நேர பயிற்சியில் ஈடுபட்டு வந்தான் கனியமுதன்.
அந்த வழியே வந்த மேலத்தெரு கந்தவேல்,
“ம்ம்.. என்ன மாப்பிள பயங்கரமான ட்ரெய்னிங்கா”... என்கிறார்.
இரைப்பு வாங்க வாங்க ஓடிக்கொண்டிருந்த அவன்,
”ஆமா மாமா..! என்று சொல்லிவிட்டு ஓடிக்கொண்டே இருந்தான்.
விசசிரிப்பை சிரித்துவிட்டு,
“
மருதா... என்ன உன்
ஆளுக்கு பயங்கரமான Training தர போல..”
என்றார்.
பீடியை இழுத்து ஊதியவர். “ஆமா மாப்ள... இந்த தடவ உள்ள போயிருவான்...”
“ம்ம்..... உள்ள பூரா எங்க ஆளுவதான்... மாப்பிள்ளய உள்ள கொண்டு போறது என்னோட வேலை.. நானும் நம்ம
பய ஒருத்தன தயார் பண்ணிட்டு இருக்கேன்... அவனையும் இவனையும் ஒண்ணா அனுப்பிடுவோம்”.. இப்படி கந்தவேல் முடிக்க..
மறுபடியும் பீடியை
இழுத்து ஊதி, “உங்க சிவாரிசு மசுரு எல்லாம் ஒன்னும்
தேவை இல்ல மாப்பிள்ள... என் ஆளு போட்டு தள்ளிட்டு வந்துருவான்”.... என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அந்தப்
பக்கமாய் மாட்டை ஓட்டிக் கொண்டிருந்த விஜயகுமாரனை கூப்பிட்டு, “இவன தான் மாமா நான் தயார் பண்றேன்.... இவன் தான் நம்ம ஆளு”... என்றார் கந்தவேலு.
“என்னய்யா இவ்வளவு
ஒல்லியாக இருக்குறான்.. 60 கிலோ வெயிட் இருக்கனும் யா... இவனைப் பார்த்தா 50 கூட வர மாட்டான் போலயே... என்னமோ போயா
மாப்ள.. செவ்வாக்கெலம பாப்போம்”... என்று அன்று மாலைப் பொழுது கழிய,
செவ்வாய் வந்தது..
"யாரும் கூட
வர வேணாம்..நீங்க வந்தா அலம்பல் பண்ணுவீங்க..வம்பா போயிடும்.அங்க வந்து நம்ம ஊர் புத்திய காட்டி புடுவிங்க. நா மட்டும் கனியன கூட்டிகிட்டு போறேன்" என்று கட்டுசிட்டாக சொல்லிவிட்டு, பேருந்து ஏறிய மருதையனும்
கனியனும், புதுக்கோட்டை பழனியப்பாவில் இறங்கி, திலகர் திடலை சென்றடைந்தனர். "ஆதார் Proof , இருப்பிட சான்று இல்லாதவன் அப்டியே ஓடி போயிரு,உள்ள வந்து கடுப்பேத்திக்கிட்டு இருக்க கூடாது" என அதிகாரி ஒருவர் சொல்ல, கனியமுதன் எல்லாமே வைத்திருந்ததால், உள்ளே சென்று பதிவு செய்துகொண்டான். வெளியே இருந்த பந்தலினுள் மருதையன்அமர, பல்வேறு கட்டங்களாக தேர்வு நடக்கிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்தவர்கள் கடுமையாக விளையாடினர். மருதையனுக்கு
அவரோடு ஆரம்பகாலத்தில் சேர்ந்து விளையாடிய குன்றாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த பழைய நண்பர் ஒருவர் கிடைக்க, அவரிடம் பேசிக்கொண்டே பொழுதை கடத்தினார். மதியஉணவு இடைவேளை வந்தது. கடும் வியர்வையோடு வீரர்கள் ஒருஒருவராக வெளியில் வந்தார்கள். வெளிநாட்டில் இருந்து வரும் கணவனை பார்க்க ஆவலாக காத்திருக்கும் மனைவியைப்போல காத்திருந்து, கனியனை கண்டவுடன் கட்டி அனைத்து, “வாடா...மெதுவா வா... என்ன சாப்பிடுவோம்? பிரியாணி திம்போமா?” என்றார்!
“அதெல்லாம் வேணாம் தாத்தா! நேத்து தின்ன மாட்டுக்கறியே என்னமோன்னு இருக்கு!
தயிர் சாதம் போதும்..நெறையா சாப்டா அப்பறம் விளையாடவும் முடியாது.” என்றவன்.. தயிர் சாப்பாடு வந்தவுடன், பொட்டலத்தை பிரித்துக்கொண்டே "உள்ள பயங்கரமா select பண்ணுறாங்க... சாங்கியாலாம் சொல்லுவாங்க யாரர்னு. நான் நல்லா விளையாண்டு இருக்கேன் தாத்தா! எல்லாமே நல்ல ரிசல்ட். என்றான்!
மருதையனுக்கு பிரியாணி சாப்பிட்ட திருப்தி! ஆனந்த கண்ணீர் பெருகினாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல்., 'செத்த படுயா' என்றார்!
மாலை வந்தது! அறிவிப்பும் வந்தது!
எதிர்பார்த்ததை போல கனியன் பெயர் பட்டியலில் இல்லை. அகண்ட விழிகளோடு,
தோள்துண்டை உதறி, கையில் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றார்! அங்கே உயரமாக நின்று கொண்டிருந்த Official ஒருவரை பார்த்து, அருகில் சென்று கேட்கிறார்,
"ஏங்க சார்..என்னங்க இந்த பையன் பேரு Listல வரல!
"ஓ..இந்த பையனா...நல்லா ஆடுறான்..ஆனா இவனுக்கு இன்னும் ஸ்டாமினா பத்தல.. அதனால Selection Committe எடுக்கல போல," என்றார்
Official.
கொதித்துப்போன
மருதையன்
“என்னங்க அநியாயமா இருக்கு,..எல்லா Ride ம் Result பாடியிருக்கான். Defence நல்ல ஆடிருக்கான்! அப்பறம் ஏன் எடுக்கல...எல்லோரை விடவும் நல்லா பாடிருக்கான்!இதுக்கு மேல என்ன வேணும்? உங்க Committe எதோ பிராடு வேல பாக்குறீங்க போல! என்றார்!
“யோவ்... Mark-அ வச்செல்லாம்
ஒருத்தன் நல்லா Player ஆக முடியாதுயா.. அதெல்லாம் நாங்க சரியான players மட்டும் நேர்மையாதான் Select பண்ணுறோம்! தேவல்லாம
கத்துக்கிட்டு இருந்த, புடிச்சு வெளிய தள்ளிருவோம்|! பாத்துக்க... ஒழுங்கா கெளம்பு போ.” என official சொல்ல,
மருதையனுக்கு சரியான கோவம்! கோவத்தோடு கோவமாக தன் ஊர் புத்தியை காட்டிவிட்டார்! அந்த Official சட்டையை பிடித்து சட்டார்...சட்டார்... என்று மருதையன் கொடுத்த அடிச்சத்தம் கேட்டு, மொத்த Selection Committe யும் வெளியே வந்து, பார்த்தபோது, அந்த official மேல் சட்டை கிழிந்த நிலையில், மருதையன் காலின் கீழே கிடந்தார்!
“ஏண்டா... எல்லா Ride ம் Result பாடியிருக்கான்! Defence ல நல்லா Performence.. Mark க்கும் நல்லா மார்க்கு.. Mark வச்சு Select பண்ண மாட்டிங்கன்னா, அப்பறம் ஏன்னா மசுருக்குடா உங்க கமிட்டி மசுரு”.....என ஆவேசமாக திட்டிக்கொண்டே Official-அ பொளக்க,
எல்லோரும் வந்து மருதையனை கட்டுப்படுத்தி அனுப்பி வைத்தனர்!
மருதையனும், கனியனும் ஒரே பேருந்தில் தனித்தனி இருக்கையில் அமர்ந்து, ஊர் வந்து சேர்ந்தனர்!
கீழத்தெரு முக்கம் திரும்பியதும் மருதையன் ஒரே சத்தம்.. “கபடி செலெக்ச்சனாம்..மசுரு செலெக்ச்சன்...ச்சீ... இன்னும் இவிங்க திருந்தலயா!” என்று திட்டிக்கொண்டே ஊர் வருகையில்,
“என்னாச்சு”.... என்று ஓடி
வந்து கேட்கிறார், வின்னரசன்.
"என்ன ஆச்சா? எல்லா திருட்டு வக்காலியலும் உள்ள இருந்துக்கிட்டு, அவிங்க சாதி பயலுகள மட்டும் தான் எடுக்குறாங்கெ....வெளில வந்ததும், List பாத்துட்டு தம்பிதான் சொன்னான்”.. என மருதையன் சொல்ல, மண்ணை பார்த்து பெருமூச்சு விட்டு, 'விடு சித்தப்பா.. அங்க போய் நாம என்ன இடஒதுக்கீடா கேட்க முடியும்! பாத்துக்கலாம் விடுங்க.. நம்ம புள்ள நம்ம ஊருக்கு ஆடுனா போதும்”. என்று வின்னரசன் சொன்ன
ஆறுதலில்
அன்றைய இரவு முடிந்தது.
மறுநாள் காலை கனியமுதன் கல்லூரிக்கு செல்ல, பேருந்தில் ஏறுகிறான்.. தனக்கு கிடைத்த சன்னல் இருக்கையில் அமர, ஊர் முக்கம் திரும்பியது பேருந்து.அங்கே ஒரு digital flex. மாவட்ட அணிக்கு தேர்வாகி இருக்கும் மண்ணின் மைந்தன்
விஜயகுமாருக்கு ஊர் பொதுமக்கள் சார்பாக வாழ்த்துகள் என்று!....
#பகத்சிங்




வாழ்த்துக்கள் தோழர் 🥰
ReplyDeleteசிறப்பு தோழர்.
ReplyDeleteகதையில் நல்ல உயிரோட்டம் உள்ளது.
எழுத்துப்பிழைகள் உள்ளன அதை சரிசெய்யுங்கள்.
தொடர்ந்து எழுத. அன்பு நிறைந்த வாழ்த்துகள் தோழர்.💐💐💐💐💐