Posts

Showing posts from August, 2024

மண்ணியல்

Image
ஆடி கடைசி வெள்ளி. கிடா வெட்டி  கோழி அறுத்து அம்மனுக்கும் அய்யனாருக்கும் முனியனுக்கும் கருப்பனுக்கும்  படையல் போட  ஆசீர்வதிக்கப்பட்ட நாள் ! சிற்றூர்களில் இருக்கும் சிறு தெய்வங்கள்  நம்மைக் காக்க  நம் ஊருக்கே வந்திருப்பதாய்  நம்பும் எளிய மக்கள் கொண்டாடும் நாள்!! சாதிக்கு ஒரு சாமி கூட்டத்திற்கு ஒரு தெய்வம் குலதெய்வம்! ஒரு வகையில்  சாதிச் சண்டை வருவதற்கும் சாமிகளே காரணம்! உழைப்பதற்காக  வெளியூர் சென்ற  ஊர்க்காரர்கள் எல்லோரையும் ஊருக்கு அழைத்து வந்திருக்கும்  உன்னதமான நாள்! சாதி ஒழிப்பு  சாமி எதிர்ப்பு பேசினாலும் "வருடத்தில் ஒரு நாள்  கோவிலில் சாப்பிடுவது தப்பில்லை... வா போகலாம்" என்று  வாஞ்சையோடு அழைக்கும் அன்பிற்கும் அசைவப் பிரியர்களுக்கும்  அர்ப்பணிக்கப்பட்ட நாள்! #பகத்சிங் 

நீதி சொல்லுங்க...

Image
 1.அடங்கமறு நாவடக்கம் தேவை என்பார்கள் நல்லொழுக்கம் போதிப்போர். நெறிக்கப்படும் குரல்வளையில்  நசுக்கப்பட்டவனின் நாக்கு  என்னுடையது!! நாக்கை அடக்கிக்கொள்வது  என்னை நசுக்குபவனுக்கு  அடங்கிப் போவதாய் அர்த்தம்! அதிகாரத்துக்கு எதிராய்  போவதுதான் என் போக்கு... நசுக்குபவனுக்கு எதிராய் எப்போதும் நீளும் என் நாக்கு! 2. பெருமை பொதுவாக எதற்கும்  பெருமைப்பட்டுக்கொள்வதில்லை! பொதுவான இடங்களில் வைத்து பெருமைப்படுத்துகிறார்கள், பெருமைக்குரிய பெருமக்கள்! பெருமைப்படுத்தும் பெருந்தன்மைக்கு நன்றி! நான்  பொதுவாக எதற்கும் பெருமைப்பட்டுக்கொள்வதில்லை.. 3.பலிகிடாய் எங்களவன் ஒருவனைத் தூண்டி  எங்களுக்கெதிராய் நிறுத்தி, நிற்பவனின் கரங்களில் அறிவாளை கொடுக்கும் ஆண்டை, அவன் கைகளுக்கு பேனா மட்டும் கிடைக்காமல் பார்த்துக்கொள்கிறான். 4. தனித்தொகுதி . மூனு ஊரு... மூனு தெரு... மூணு ஊருக்கும்  மூனு சாதி  பெருஞ்சாதி! இந்த மூனு ஊர்லயும் இருக்கு எங்க சாதி! மூனு ஊரும் ஒரே ஊராட்சி.. ஊராட்சி எலக்சன் பொதுவுல வந்தா ஊருக்கு ஒருத்தன்தான்  பொதுவுல நிப்பான்! "சாதிக்கு ஒருத்தன்"தா...