நீதி சொல்லுங்க...



 1.அடங்கமறு

நாவடக்கம் தேவை என்பார்கள்

நல்லொழுக்கம் போதிப்போர்.

நெறிக்கப்படும் குரல்வளையில் 

நசுக்கப்பட்டவனின் நாக்கு 

என்னுடையது!!

நாக்கை அடக்கிக்கொள்வது 

என்னை

நசுக்குபவனுக்கு 

அடங்கிப் போவதாய் அர்த்தம்!


அதிகாரத்துக்கு எதிராய் 

போவதுதான்

என் போக்கு...

நசுக்குபவனுக்கு

எதிராய்

எப்போதும் நீளும்

என் நாக்கு!

2. பெருமை

பொதுவாக எதற்கும் 

பெருமைப்பட்டுக்கொள்வதில்லை!

பொதுவான இடங்களில் வைத்து பெருமைப்படுத்துகிறார்கள்,

பெருமைக்குரிய பெருமக்கள்!

பெருமைப்படுத்தும்

பெருந்தன்மைக்கு நன்றி!

நான் 

பொதுவாக எதற்கும் பெருமைப்பட்டுக்கொள்வதில்லை..


3.பலிகிடாய்

எங்களவன் ஒருவனைத்

தூண்டி 

எங்களுக்கெதிராய் நிறுத்தி,

நிற்பவனின் கரங்களில்

அறிவாளை கொடுக்கும்

ஆண்டை,

அவன் கைகளுக்கு

பேனா மட்டும் கிடைக்காமல் பார்த்துக்கொள்கிறான்.




4. தனித்தொகுதி.

மூனு ஊரு...

மூனு தெரு...

மூணு ஊருக்கும் 

மூனு சாதி 

பெருஞ்சாதி!

இந்த மூனு ஊர்லயும்

இருக்கு

எங்க சாதி!


மூனு ஊரும் ஒரே ஊராட்சி..


ஊராட்சி எலக்சன்

பொதுவுல வந்தா

ஊருக்கு ஒருத்தன்தான் 

பொதுவுல நிப்பான்!

"சாதிக்கு ஒருத்தன்"தான்னு

சபதம் போட்டு நிப்பான்!


அடுத்து தனித் தொகுதியா 

எலக்சன் வரும்..

சேரிகள சேர விடாம 

Safe ஆ அரசியல் பண்ணுவானுங்க....

தெருவுக்கு மூன்று பேர நிக்க வச்சு தெளிவா அரசியல் பண்ணுவானுங்க,

தே......பயலுக..


5.பறைகூவல்

அடுத்த வாரம்

திருவிழா!

ஊரெல்லாம் ரேடியா பாடும்..

பெரிய பெரிய ஸ்பீக்கர்

காதைப் பிளக்கும்!


ஆட்டோவில் ரேடியா கட்டி 

அலோன்ஸ் பறக்கும்!

நோட்டீஸ் ஒட்டுதல்,

Whatsapp Status

Facebook Post

Instagram Story ன்னு 

எல்லா பக்கமும்

செய்தி போய் சேரும்!


இப்படி 

வெரைட்டி வெரைட்டியா

செய்தி சொன்னாலும் 

வெட்டியான் கையில

தப்ப கொடுத்து 

தண்ட்ரா போட சொல்றப்பதான் 

தன்னிறைவு அடையிறான்

தலைமுறை தலைமுறையாய்!



#பகத்சிங் 


 







Comments

Popular posts from this blog

மரப்பயணம்

திருமா திமுகவுடன் தான் இருப்பார்!!

அறம்