யுசுப் எனும் நண்பன்
எங்கள் ஊரில் நாங்கள் வைத்திருக்கும் பெட்டிக்கடையில் வழக்கம் போல உட்கார்ந்து வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தேன். சொந்த கடைதான் என்பதால் வருகின்ற யாராக இருந்தாலும் வியாபாரம் நோக்கிலேயே அணுக வேண்டியிருந்தது. ஊரின் பிரதான சாலையில் இருக்கும் பெரிய கடைகளை போல பெரிய கடையாக இல்லாவிட்டாலும், தெருவில் வசிக்க கூடிய மக்களுக்கு அன்றாட தேவைகளான பால் பாக்கெட், காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் மட்டுமே விற்கப்படும். அது போக சிறுவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய தின்பண்டங்கள் சிப்ஸ் வகைகள், கூல்ட்ரிங்க்ஸ் என அனைத்தும் இருக்கும். ஊரின் எல்லை பகுதியில் ஒரு பெரிய தனியார் தொழிற்சாலை இருக்கிறது. அதில் வெளி மாநிலத்தை சேர்ந்த பலரும் வேலை பார்க்கின்றனர். குறிப்பாக 18 வயது முதல் 40 வயதுடைய ஆட்கள் கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்டோர் வேலை பார்க்கிறார்கள். அதில் ஒருவருக்கும் தமிழ் தெரியாது. சிலர் அரைகுறை தமிழ் பேசுவார்கள்.. சினிமா நடிகைகளை போல! எங்கள் கடையில் அவர்கள் விரும்பி சுவைக்கும் தின்பண்டங்கள், இனிப்புவகைகள் போன்றவை இருப்பதனால், நம் கடை பக்கம் அடிக்கடி வருவார்கள். சுழற்சி முறையில் (Shif...