Posts

Showing posts from August, 2022

கொண்டாடி தீர்ப்போம் அவளை!

Image
 Queen Of katwe உலகெங்கிலும் பிறந்திருக்கும் மானுட சமூகத்தில், நிறவெறிக்கு ஆளாக்கப்பட்டு  ஒடுக்கப்பட்ட இனமாக நடத்தப்படும் கருப்பின மக்களில் ஒரு பெண், தன் மீது சுமத்தப்பட்ட சமூக ஒடுக்குமுறைகளையெல்லாம்  தகர்த்து, செஸ் விளையாட்டில் தான் ஒரு சிறந்த வீராங்கனை என்பதை நிரூபித்து தன் சேரி கொண்டாடப்படும் நாயகியின் கதையே இப்படம்! உகாண்டா நாட்டில் இருக்கும் ஒரு சிறு நகரமான Katwe நகரை ஒட்டி இருக்கும் சேரியில் வசிக்கிறாள் ஒரு பெண்! இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் இரண்டு ஆண் குழந்தைக்கு அம்மாவாக இருக்கும் அப்பெண் கணவனை இழந்தவள்! வறுமையின் காரணமாக கல்வியறிவு எட்டமுடியாத அந்த குடும்பத்தில்,  மூத்தப்பெண் வீட்டை விட்டு ஓடிப்போக, தன் ஒரு மகளையும் மகனையும் நகரிலுள்ள சந்தையில் சோளம் விற்பனை செய்யும் வேலைக்கு அனுப்பி வைக்கிறாள்! சோளத்தை ஒரு இடைத்தரகர்கள் மூலம் கொள்முதலாகப்பெற்று அந்த குழந்தைகளின் தாயான இவளும் கைக்குழந்தையுடன் சோளம் விற்கிறாள்.  இப்படியாக வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்க, phiano என்கிற இரண்டாவது மகள் சேரியில் இருந்து ஒரு நாள்  சோளம் விற்க செல்கையில் அங்கே ஒரு செஸ் பயிற்ச...

தேடி அடிப்போம்! தேசிய பாம்புகளை!!

Image
நல்ல பாம்பு அருகில் இருந்தால் வெல்லப்பாகு வாடை வருமாம்! வாடையில் மயங்கி பாதையை மாறாமல் நின்றால் பாடையில் ஏறுவது பகிரங்க உறுதி! வாடையில் மறைகிறது வாழ்வை முடிக்கும் விசம்!! அதேபோல, செய்யும் மதவெறி தாக்குதல்களை நடத்தும் மதவெறி அரசியலை *தேசியம்* எனும் ஆடையை அணிந்து *தேசபக்தி* வாடையில் கலந்து வெறுப்பு அரசியலை விதைத்து அலைகின்றன தேசம் முழுக்க சில தேசிய பாம்புகள்!! படிப்பில் மட்டும் முட்டை போட்ட நச்சுப்பாம்புகளுக்கு பொருளாதார புரிதலும் இல்லை! பொதுமக்கள் மீதும்  அக்கறையில்லை!! நச்சுரனையில்லா நல்ல பாம்புளுக்கு நாட்டுப்பற்று மட்டுமே கேடு தாமரை புற்றுக்குள் தஞ்சம் புகுந்த பாம்புகளை *ஈரோட்டுத் தடி* எடுத்து தலையில் அடிப்பதா? இல்லை அண்ணலை ஆயுதமாக்கி பாம்பின் பல்லை பிடுங்குவதா? எத்தனை படம் எடுத்தாலும் எவர் இசையாமைத்தாலும் எச்சரிக்கையாய் இருப்போம் தேசிய பாம்புகளிடம்! #பாம்படிப்பதில் கைத்தேர்ந்த பகத்!