புனிதம் அல்ல, புரிதல்!!
1- தொலைந்துபோ தூரமே. ' 300 கிலோமீட்டருக்கு அந்தப் பக்கம் இருக்கும் உனக்காக என்னால் வெறும் 30 நொடி Statusதான் வைக்க முடிகிறது! 30MB யில் Speed கிடைத்தால் தான் முகம் பார்த்தே பேச முடிகிறது! 30 நிமிட உணவு இடைவெளியில் வெறும் மூன்று நிமிடம் தான் பேச முடிகிறது! மூன்று முடிச்சுக்காக காத்திருக்கும் உன்னிடம் நான் எப்படி முற்போக்கு பேசுவது? 2- மலக் காதல் அடிப்பாவி! என்னை பிடிக்கும், என் சாதியை பிடிக்காது என்கிறாய்! எனக்கும் சாதி பிடிக்காது! உனக்கு என் சாதி பிடிக்காது! எனக்கு எந்த சாதியும் பிடிக்காது! 3- internet காதல் அப்போதெல்லாம் காதலில் இணைய நிறைய தேவைகள்! நண்பர் தோழி தூதுகள்! காத்திருத்தல் அலைந்திருத்தல் பாத்திருத்தல் தேவை! இப்போது தேவை 'இணைய' சேவை! 4-நேர்மை எவருக்காகவும் காதலிப்பதை மறைக்க வேண்டியதுமில்லை! எல்லோரிடமும் காதலிப்பதை சொல்ல வேண்டியதுமில்லை!! 5-அதில் நான் சிறந்தவன் எந்த பெண்ணிடம் காதலைச் சொன்னாலும் 'என்னவனுக்கு முன்பாக உன்னை கண்டிருக்க வேண்டும்' என்கிறார்கள்! எனக்கு முன்னவே அவன் அதிகம் பொய் சொல்லியிருக்கிறான் போல! 6-உழல்தல் எப்படி தனியாகவே இருக்கிறாய்! என்...