புலப்படாமல் போனவை!
பாராய் கடன் சில கிழமைகளை நினைவூட்டி செல்லும் வாரவட்டிக்காரர்களுக்கு நன்றி ! விடுதலை தன்னை தேக்கி வைத்த மண்ணை ஊறவைத்து உடைத்து வெளியேறும் வாய்க்கால் நீர் ! நகல் அவள் ! என்னை விரும்பும் இன்னொரு நான் ! மாற்றம் மண்ணாக கிடைக்கும் என்னை நீராக வந்தவள் வருடி செல்கிறாள் ! நான் மணலாக மாறுகிறேன் ! தன்மை வெயி ல் காலத்தில் கான்கிரிட் அடுப்புகள் காலனி வீடுகள் .. மழைக்காலத்தில் கான்கிரிட் கம்பளிகள் காலனி வீடுகள் ! மூர்க்கம் பரவாயில்லை ! தன் " குலதெய்வமும் ஒரு பெண்தானே " சமரசம் செய்துகொள்கிறான் முற்போக்குவாதி ஒருவன் ! கொடுமை கடுங்குளிரிலும் காற்றாடியை போட வைக்கிறது கொசு! தயக்கம் ! மேலத்தெரு கீழத்தெரு இருந்தாலும் எங்க தெரு என்னவோ இங்கிலீஷ் தெருதான் ! ...