புலப்படாமல் போனவை!

 


பாராய் கடன்                                              

சில கிழமைகளை

நினைவூட்டி செல்லும்

வாரவட்டிக்காரர்களுக்கு

நன்றி!


விடுதலை

 தன்னை

தேக்கி வைத்த

மண்ணை

ஊறவைத்து

உடைத்து வெளியேறும்

வாய்க்கால் நீர்!


நகல்

அவள்!

என்னை விரும்பும்

இன்னொரு நான்!


மாற்றம்

 மண்ணாக கிடைக்கும்

என்னை

நீராக வந்தவள்

வருடி செல்கிறாள்!

நான்

மணலாக மாறுகிறேன்!

 

தன்மை

 வெயில்காலத்தில்

கான்கிரிட் அடுப்புகள்

காலனி வீடுகள்..

மழைக்காலத்தில்

கான்கிரிட் கம்பளிகள்

காலனி வீடுகள்! 


மூர்க்கம்

பரவாயில்லை!

தன்

"குலதெய்வமும் ஒரு

பெண்தானே"

சமரசம் செய்துகொள்கிறான்

முற்போக்குவாதி ஒருவன்!

 

கொடுமை

கடுங்குளிரிலும்

காற்றாடியை  போட வைக்கிறது

கொசு!


தயக்கம்!

மேலத்தெரு

கீழத்தெரு

இருந்தாலும்

எங்க தெரு

என்னவோ

இங்கிலீஷ் தெருதான்!

 

சிந்தனை

அமைதியைப்பற்றி

கவிதை எழுத

புரட்சிகர புத்தகங்களை

வாசிக்க வேண்டியிருக்கு!

 

என்னதான்?

குடிப்பவர்களுக்கு

காரணமே

தேவைப்படுகிறது!

தீர்வுகள் அல்ல!!

 

மனக்கசப்பு!

நாளை

அணியப்போகும்

ஈர உள்ளாடையின்

எரிச்சலை நினைத்து

இந்த இரவும்

கழிகிறது

மழையினால்

உலராத

ஆடைகளை

நினைத்து!

 

தாய்மை 

வறண்ட பூமியின்

ஈர நெஞ்சம் 

கள்ளிப்பூக்கள்!

                                                                                                                                                                               தொகுப்பு

                                                                                                                                                                              #பகத்சிங்

                                                                                                                                                                               18/07/2021

                                                        

Comments

  1. ஆழமான சிந்தனைகள் தோழர்....

    வாழ்த்துகள் தோழர்

    ReplyDelete
  2. வாழ்த்தும் அன்பும்...இளவலே

    ReplyDelete
  3. சிறப்பான ஹைக்கூ தொகுப்பு. வாழ்த்துக்கள் தோழர். படைப்புகள் அனைத்தும் அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மரப்பயணம்

திருமா திமுகவுடன் தான் இருப்பார்!!

அறம்