Posts

Showing posts from January, 2021

வேட்டி கட்டுவோம் வாங்க தமிழா!

Image
இன்று வேட்டிகள் தினம். அதென்ன  வேட்டிகள் தினம்.. வேட்டி தினம் என்றுதானே சொல்லவேண்டும்!.. வணக்கம் நண்பர்களே.... நம் மண்ணில் வேட்டி கட்டும் பழக்கம் என்பது நம்மிடையே தவிர்க்க முடியாத ஒரு சடங்காக மாறிவிட்டது. இதை ஏன் சடங்கு என குறிப்பிடுகிறோம் என்றால், மக்களுக்காக முன் நிற்கும் அரசியல் தலைவர்கள் தவிர, சடங்கு சம்பிரதாய முறைகளுக்கவே நம்மில் பலர் இங்கே அதிகம் வேட்டியை உடுத்திக்கொள்கிறோம். உதாரணமாக சொன்னால், அந்தந்த ஊரில் நடக்கும் விழாக்கள், முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டுமே நம்மில் பலர் வேட்டி அணிந்து கொள்வது வழக்கம். இதில் யாரும் யாரையும் வேட்டி கட்டிக்கிக்கொள்ள நிர்ப்பந்திக்கவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு பண்பாட்டின் அடையாளமாக, நீட்சியாகவே இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்! நாகரீகத்தின் வளர்ச்சியால் மற்ற இடங்களில், மற்ற நேரங்களில் நமக்கு ஏதுவாக இருப்பது என்னவோ 'பேண்ட்' வடிவிலான உடைகள்தான். அதேபோல 'மாலை அணிவிப்பு' என்கிற சடங்குமுறையில் வேட்டி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கோவில்களுக்கு மாலை அணிவித்து கொள்ளும் பக்தர்கள் தங்களின் Seniority அடிப்படையில், நிறங்களை தேர்ந்தெடுத்து உடுத்திக்கொள...