Posts

Showing posts from March, 2024

நட்பின் வழி....

Image
 நல்ல பண்புகளை எடுத்துரைப்பதே நட்பின் அடையாளம்! தேவைப்பட்டால் இடித்துமுரைக்கலாம்! ஒவ்வொரு பூவுக்கும் ஒவ்வொரு வாசம் போல ஒவ்வொரு நட்பிற்கும் ஒவ்வொரு தனித்துவம்! எனவே நட்புகளில் மட்டுமே  நட்பூக்களை காணலாம்! எவரையும் கூட பகைவராக்கி விடலாம்! ஆனால், எவரையும் நம்மால் நண்பனாக்குவது கடினம்! பகைக்குள் சண்டை வெறுப்பு கயமை மட்டுமே இருக்கும்! ஆனால் நட்புக்குள் ரகசியம் ராஜ்ஜியம் காதல் மோதல் அக்கறை அரவணைப்பு என அனைத்தும் உண்டு! எல்லோரிடமும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வது கடினம்! ஆனால் அவையெல்லாம் நல்ல நண்பனிடம் சொல்லிவிடலாம் அதுவே நட்பின் நளினம்! நட்பு கலந்த நன்றி வணக்கம்!