கொண்டாடி தீர்ப்போம் அவளை!

 Queen Of katwe



உலகெங்கிலும் பிறந்திருக்கும் மானுட சமூகத்தில், நிறவெறிக்கு ஆளாக்கப்பட்டு  ஒடுக்கப்பட்ட இனமாக நடத்தப்படும் கருப்பின மக்களில் ஒரு பெண், தன் மீது சுமத்தப்பட்ட சமூக ஒடுக்குமுறைகளையெல்லாம்  தகர்த்து, செஸ் விளையாட்டில் தான் ஒரு சிறந்த வீராங்கனை என்பதை நிரூபித்து தன் சேரி கொண்டாடப்படும் நாயகியின் கதையே இப்படம்!

உகாண்டா நாட்டில் இருக்கும் ஒரு சிறு நகரமான Katwe நகரை ஒட்டி இருக்கும் சேரியில் வசிக்கிறாள் ஒரு பெண்! இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் இரண்டு ஆண் குழந்தைக்கு அம்மாவாக இருக்கும் அப்பெண் கணவனை இழந்தவள்! வறுமையின் காரணமாக கல்வியறிவு எட்டமுடியாத அந்த குடும்பத்தில்,  மூத்தப்பெண் வீட்டை விட்டு ஓடிப்போக, தன் ஒரு மகளையும் மகனையும் நகரிலுள்ள சந்தையில் சோளம் விற்பனை செய்யும் வேலைக்கு அனுப்பி வைக்கிறாள்! சோளத்தை ஒரு இடைத்தரகர்கள் மூலம் கொள்முதலாகப்பெற்று அந்த குழந்தைகளின் தாயான இவளும் கைக்குழந்தையுடன் சோளம் விற்கிறாள்.

 இப்படியாக வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்க, phiano என்கிற இரண்டாவது மகள் சேரியில் இருந்து ஒரு நாள்  சோளம் விற்க செல்கையில் அங்கே ஒரு செஸ் பயிற்சியாளர் அங்கிருக்கும் சிறுவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு செஸ் சொல்லிக் கொடுப்பதை பார்க்கிறாள் !

 அந்த கூடாரத்தை எட்டி பார்க்கும்பொழுது அந்த பயிற்சியாளர் இவளையும் உள்ளே அழைத்து, சக சிறுவர் சிறுமியர் உடன் விளையாட வைக்கிறார்.. இவர் மீது துர்நாற்றம் அடிப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாற்றம் அடிப்பதை காரணங்காட்டி அவளை விரட்டுகிறார்கள்! இதனால் அவள் அடுத்த நாள் நன்றாக குளித்துவிட்டு பழைய ஆடையை விட சற்று நல்ல ஆடையை அணிந்து பயிற்சிக்கு செல்கிறாள்!

நம்மூரில் "சாதியை சொல்லி சேரி மக்களை ஒதுக்குகிறார்கள்"  என்றால், அந்த ஊரில் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒதுக்குகிறார்கள்! இத்தனைக்கும் நம்முடைய போல அவர்களுக்குள் மேல்சாதி-கீழ்சாதி என்கிற பாகுபாடெல்லாம் இல்லாமல், ஒரே கருப்பு இனத்துக்குள் 'வர்க்கம்' அவர்களை ஊர்-சேரியாக  பிரித்து வைத்திருக்கிறது! அங்கே நம் நாட்டைப் போல ஒடுக்கப்பட்ட மக்கள் பணக்காரர்கள் ஆனாலும் சேரிக்குள் மட்டுமே இருப்பதைப்போல் அங்கே இருக்க தேவையில்லை! 'பணம் வந்துவிட்டால் ஊரோடு கலந்துவிடலாம்'! என்கிற நிலைதான் அங்கே இருப்பில் உள்ளது! இப்படியாக கதை நகர,செஸ் விளையாட்டில்  phiano தன்னை ஒரு நல்ல திறமைசாலியாக வளர்த்துக் கொள்கிறாள்!  அவரும் அவருடைய சகாக்களும் நல்ல திறமையான செஸ் விளையாட்டு வீரர்களாக மாறுகின்றனர்! பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் இவர்களை பங்கு பெற செய்ய வேண்டுமென்று, அவர்களின் பயிற்சியாளர் செஸ் ஒருங்கிணைப்பாளர்களை அணுகுகிறார்! "

சேரிப்பிள்ளைகளெல்லாம் அந்தப் போட்டிகளில் அனுமதிக்க முடியாது!! அவர்களால் அதற்கான தொகையை கட்ட முடியாது! எனவே அவர்களை அனுமதிக்க முடியாது! இந்த போட்டியில் பங்குபெறபோகிறவர்களெல்லாம் பணக்காரப் பிள்ளைகள்!" என திட்டவட்டமாக சொல்ல, ஒற்றை அழகு முயற்சிசெய்து அந்த போட்டிக்கான பணத்தை ஏற்பாடு செய்து தன் பிள்ளைகளை அந்தப் போட்டியில் கலந்துகொள்ள செய்கிறார் பயிற்சியாளர்! பிள்ளைகள் தனது அசாத்திய திறமைகளால் வெற்றி பெறுகின்றனர்! அதிலும் குறிப்பாக Phiano தனித்து கவனிக்கப்படுகிறாள்!

 அடுத்தடுத்த படியான போட்டிகளில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிகளிலும் வெற்றிபெற்று,

 ரஷ்யாவில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு உகாண்டா நாட்டின் சார்பாக கலந்து கொள்கிறாள் Phiano!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஏதோ ஒரு பதற்றத்தில் தோல்வி அடைகிறாள்!

வெள்ளை நிறமாக இருக்கும் கனடா நாட்டு வீராங்கனையிடம் phiano தோல்வி அடைவதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும்! மீண்டும் நாட்டுக்கு திரும்பி பல பயிற்சிக்கு பிறகு மீண்டும் ஒரு மிகப் பெரிய போட்டியில் வெற்றி பெறுவாள்! இந்த முறை சக கருப்பினப் பெண்ணிடமே வெற்றி பெருவாள்! வெள்ளை இனப் பெண்ணிடம் தோல்வி கொண்டதாகவும், சக கருப்பின பெண்ணிடம் வெற்றி கொண்டதாகவும் காட்சியமைக்கப்பட்டிருந்தது, ஏதோ ஒருவகையில் வெள்ளை ஆதிக்கத்தை நிலைநிறுத்தி இருப்பதாகவே எனக்கு தெரிந்தது! இப்படியாக செல்ல, இறுதியில் தனது குடும்பத்திற்கென்றே தனியாக ஒரு வீட்டை வாங்கும் அளவிற்கு திறமைசாலியாகவும் கல்வியில் சிறந்தவளாகவும் தன்னை வளர்த்துக்கொள்கிறாள் phiano! எதுவும் சொல்லாமல் தன் குடும்பத்தை தனியாக ஒரு காரில் அழைத்துச் சென்று, தங்களின் வீட்டை அவர்களுக்கு காட்டும் ஆனந்தக் கண்ணீரோடு படம் முடிகிறது!

நன்றி!


பகத்சிங்

புனல்குளம்

26.08.2022


Comments

  1. Nice thambi, unnoda purithala azhaga pathivu panniruka,
    Keep Rock... 💐

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மரப்பயணம்

திருமா திமுகவுடன் தான் இருப்பார்!!

அறம்