அந்த

முதல்நாள் முதல்
அவளும் நானும்...
பரிதவித்த பார்வை,அதற்கு
பதிலளித்த பார்வை.அது
திடமான அன்பில்
நீக்கியது சோர்வை..
நெருக்கமான பேச்சோடு
நெடுந்தூர பயணம்.
உருக்கமான மூச்சில்
உண்மையான காதல்.அதன்
மென்மையான ஊடலில் நம்
தனிமைக்கான தேடல்..
பரிமாறிய பரிசுகளில்
உருமாறிய காதல்.
உருமாறிய காதலால்
உண்டாகவில்லை மோதல்...
அவளை நானும்
என்னை அவளும்
மாறிமாறி சிந்திப்பது....
சிலிர்ப்பான சந்திப்பு
சிலபோது சந்திப்பு,அதுவும்
சில நேரம்தான் சந்திப்பு.
உண்மை சொல்ல உளறல்
இதுவும் அவ்வப்போது தொடரால்..
அவ்வப்போது கோபம்
அவ்வப்போது சண்டை
கண்டிப்பாக வேண்டியிருந்தது,
நம் காதல் பன்பட....
அன்பான காதலால்
வம்பான சில நட்புகளும்
அன்பான நட்புகளால்,புது
தெம்பான காதலும்...
இவ்வளவுதான் இதுவரை
அவளும் நானும்....

பகத்சிங்

           ❤❤❤  

           25/10/2020



Comments

Popular posts from this blog

மரப்பயணம்

திருமா திமுகவுடன் தான் இருப்பார்!!

அறம்