அந்த மரம் ஆறு பெருங் கிளைகளைக் கொண்டிருந்தது! அன்று சிறுவர்களாய் இருந்த நாங்கள் ஏறி விளையாடும் அற்புத மரம்! ஒரு கிளையில் விமானப்பயணம் ஒரு கிளையில் கப்பல் பயணம் ஒரு கிளையில் பேருந்து பயணம் என எங்கள் சுற்றுப்பயணங்கள் அனைத்தும் அந்த மரத்தைச் சுற்றியே அமைந்திருக்கும்! விடுமுறை தினங்களில் நிரம்பும் போக்குவரத்து வாகனங்களைப் போல மரமும் நிரம்பிக் கொள்ளும் மாணவராகிய எங்களால்! எங்கள் கால் தடம் படுவதால் கட்டெறும்பு சிற்றெறும்பு என எதுவும் ஏறாது!! பின்பொருநாளில் அந்த மரத்தை மகளின் கல்யாணத்தில் சமைக்க விறகுக்காக வெட்டி வீழ்த்தினார் அந்த மரத்துக்காரர்! வேரோடு சாய்ந்தது மரம் மட்டுமல்ல! எங்கள் மகிழ்வான நினைவுகளும் தான்! # பகத்சிங்
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆனந்த விகடன் வெளியிட்ட ' எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' எனும் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தவெக தலைவரும் நடிகருமான விஜய் அவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு கூட்டணி கட்சிகளின் அழுத்தம் இருப்பதாக சொல்லிவிட்டு, திருமா திமுகவின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதைப் போல பேசினார்! முதலில் அதற்கு வன்மையான கண்டனங்களை பதிவு செய்கின்றோம்! அதற்கும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தலைவர் திரு திரு. திருமா அவர்கள், "அழுத்தம் கொடுத்து இணங்கக் கூடிய அளவிற்கு நானும் விடுதலைச் சிறுத்தைகளோ பலவீனமாக இல்லை" என்று பதிலடி கொடுத்தார். இது பற்றி நம்முடைய பார்வையை உங்கள் முன் எடுத்துரைக்கிறோம். முதலில், 'திருமா அவர்கள் திமுக கூட்டணியில் தான் இருப்பார். திமுக கூட்டணியில் தான் இருக்க வேண்டும்' என்பதுதான் சரியான வாதமாகும். ஏனென்றால்,ஆரம்ப காலத்தில் தலித் மக்களின் குரலாக அறியப்பட்டு, இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் குரலாக ஒலித்துக் கொண...
1.சமரசக்கொடி கொள்கைப் பேசி கூட்டம் சேர்க்க நீங்கள் நீட்டிப் பிடிக்கும் கொடிகளின் நிறங்கள் வெவ்வேறு..... கொள்கையை பிரதிபலிக்க வேண்டிய கொடியின் நிறங்கள் சில நேரங்களில் சிலருக்காக வெள்ளைக் கொடிகளாகிப்போவதென்ன வேடிக்கை?! 2.அரசு நமக்கானது . இறந்த பின்பு அரசு மரியாதையெல்லாம் கிடைக்க வேண்டாம், இருக்கும்போது அரசு மருத்துவமனையில் கொஞ்சம் மரியாதை கிடைத்தால் போதும்! 3. தீண்டும் ஆமை ஒரே கடையில் அதே விலையில் நேற்று நான் குடித்த குவளையில் நீயும் நீ குடித்த குவளையில் நானும் அருந்தும் தேநீரில் உனக்கு மட்டும் என்ன மூல வியாதி மருந்து கலந்தா கொடுக்கிறார்கள்? உட்கார்ந்து குடிக்க மறுக்கிறாயே என் அருகில்.... 4.ஒரு காதல் கதை எனக்கு பிடித்த எல்லாமும் உனக்கு பிடிக்கத் தேவையில்லை.. உனக்கு பிடித்த எல்லாமும் சில நேரங்களில் எனக்கும் பிடிப்பதில்லை... ஆனால், நீயும் நானும் ஒன்றாகவே இருக்கின்றோம், ஒரு முட்டைக்குள் மஞ்சள் கரு வெள்ளை கருவைப் போல..... 5.ஆறறிவு விலங்கு. மதத்துக்குள் அடங்கும் கடவுளால் கூட மதங்கொண்ட யானையை அடக்க முடிவதி...
Comments
Post a Comment