கலங்கவைத்த கர்ணன்.


இந்துத்துவ ஆதிக்கத்திற்கு பின்னர், அழித்தொழிக்கப்பட்ட தலையில்லா புத்தரின் சிலையை காண்பிப்பதோடு படம் தொடங்குகிறது. ஆரம்பம் முதல் கடைசி வரையில் இருக்கையின் நுனியிலேயே திரைக்கதையின் வேகம் நம்மை அமரவைக்கிறது. அதிகம் மெனக்கெட்டு நடித்திருக்கும் தனுஷ் மற்றும் லால் போன்றோரின் யதார்த்தமான நடிப்பு, முதல் பாதியில் ஆதி இசையையும் அடுத்த பாதியில் நவீன இசையையும் அள்ளி தெளித்திருக்கும் சந்தோஷ் நாராயணனின் இசையும், தேனி ஈஸ்வரன் அவர்களின் திகட்டாத ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்கிறது. படத்தின் வேகத்திற்கு எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாத மாதிரி படத்தொகுப்பை மிக தெளிவாக கையாண்டு இருக்கிறார்கள். யுகபாரதியின் வரிகளில் இலக்கிய வாடையும், எதார்த்த வரிகளில் எளிய மக்களின் விடுதலையும் தெறிக்கிறது. "மஞ்சனத்தி புராணம்" கண்ணீர் வர வைக்கிறது.


*கர்ணன் எப்படி?*


அதிகார வர்கத்தினரால் எளிய மக்களின் மீது ஏவப்படும் அடக்குமுறைகளுக்கு எதிரான கோபத்தின் வெளிப்பாடே கர்ணன்.


கர்ணனின் "சுயசாதிபற்றை தூக்கி பிடித்திருக்கிறார்கள் என்றும், "சாதிய குறியீடுகளை அதிகம் வைத்திருக்கிறார்கள்" என்றும் இங்கே சிலர் எழுதுகிறார்கள்.

அடிப்படையில் அவர்களின் புரிதல் தவறு. ஏனென்றால், விடுதலைக்காகவும் சமத்துவத்திற்காகவும் போராடுகிற எந்த ஒரு சமூகமோ, இனக்குழுவோ, இயக்கமோ எதுவானாலும் அவர்களின் உரிமைகளை பேசும்போதுதாம் அவர்கள் பொது சமூகத்தில் அடையாளப்படுகின்றனர். எனவே, போராடுகிற சமூகம் தாங்கள் போற்றுகின்ற நபரையோ, தலைவரையோ, தெய்வத்தையோ முன்நிறுத்துவதில் அடையாளப்படுத்துவத்தில் எந்த தவறும் இல்லை! இது சாதி பெருமையும் இல்லை!


பேருந்து நிற்காமல் செல்லும் கிராமம், ஆளும் வர்கத்திடம் பணம் வாங்கிக்கொண்டு எளிய மக்களின் மீது வழக்கு போடும் காவல்துறை என கதையை இயல்பாகவே நகர்தியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.


படத்தில் காட்டப்படும் கொடியங்குளம் கலவரம் திமுக ஆட்சியில் நடந்தது என சிலரும், அதிமுக ஆட்சியில் நடந்தது என சிலரும் இங்கே விவாதித்து வருகின்றனர். அப்போது எவர் ஆட்சியில் இருந்தாலும், காவல்துறையினரால் இப்படி ஒரு கிராமமே சூறையாடப்பட்டு, அங்கிருக்கும் மக்களின் மீது வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தப்பட்டது உண்மை என்பதும் மட்டும் குறிப்பிடத்தக்கது.


இன்னும் சிலர் கூறுகின்றனர், மகாபாரத புராணம் மீதெல்லாம் நம்பிக்கை இல்லாத நீங்கள், ஏன் கதாநாயகன் பெயர் கர்ணன், கதாநாயகி பெயர் திரௌபதை, வில்லனின் பெயர் கண்ணன் என்றெல்லாம் கேட்கின்றனர்.


அதற்கு பதில் என்னவென்றால், *வெகு மக்கள் நம்பக்கூடிய ஒரு தகவலில் இருந்து நமக்கு தேவையான அரசியலை பேசுவதே புராணங்களின் மீதான நம்பிக்கைகளை உடைப்பதற்கான முதல் அடி* என்பதே எனது வாதமும் கூட. கண்ணன், யசோதை, மீரா என்றே பழக்கப்பட்ட சமூகத்திடம் கர்ணனின் வலியை இந்த மாதிரி திரைப்படங்கள் மூலமாக மட்டுமே நாம் கொண்டுசேர்க்க முடியும்.



தன் சொந்த ஊரை துயரில் விட்டு செல்ல மனமில்லாத கதாநாயகனின் வலி, காதலனை பிரிந்த காதலியின் வலி, காவல்துறை முன்னால் ஏதும் செய்ய முடியாமல் தன்னை தானே எரித்துக்கொள்ளும் ஏமனின் வலி, உயிருக்கு பயந்து வீட்டிற்குள் ஒழிந்திருக்கும் ஆண்களின் நடுவே பிரசவிக்கும் ஒரு தாயின் வலி, கர்ணனை அழைக்க வரும் குதிரைக்கார தம்பியின் வலி, என வலிகள் நிறைந்த உச்சக்கட்ட காட்சியில், கர்ணா....வாயா.. என்கிற கதரலோடு நடக்கும் திருப்பம் படத்தை வெற்றிப்படமாக மாற்றியிருக்கிறது.


வணிக ரீதியாக இயங்கும் சினிமாவில் இதைப்போன்ற திரைப்படங்கள் தான் பொது சமூகத்திற்கு மிக முக்கியமான திரைப்படங்கள்.


தோழமையுடன்

S. பகத்சிங் B.Sc Info Tech

12.04.2021

Comments

Popular posts from this blog

மரப்பயணம்

திருமா திமுகவுடன் தான் இருப்பார்!!

அறம்