மண்ணியல்

ஆடி கடைசி வெள்ளி.



கிடா வெட்டி 

கோழி அறுத்து

அம்மனுக்கும் அய்யனாருக்கும் முனியனுக்கும் கருப்பனுக்கும் 

படையல் போட 

ஆசீர்வதிக்கப்பட்ட நாள் !


சிற்றூர்களில் இருக்கும்

சிறு தெய்வங்கள் 

நம்மைக் காக்க 

நம் ஊருக்கே வந்திருப்பதாய் 

நம்பும்

எளிய மக்கள் கொண்டாடும் நாள்!!


சாதிக்கு ஒரு சாமி

கூட்டத்திற்கு ஒரு தெய்வம்

குலதெய்வம்!


ஒரு வகையில் 

சாதிச் சண்டை வருவதற்கும்

சாமிகளே காரணம்!


உழைப்பதற்காக 

வெளியூர் சென்ற 

ஊர்க்காரர்கள் எல்லோரையும்

ஊருக்கு அழைத்து வந்திருக்கும் 

உன்னதமான நாள்!


சாதி ஒழிப்பு 

சாமி எதிர்ப்பு பேசினாலும்

"வருடத்தில் ஒரு நாள் 

கோவிலில் சாப்பிடுவது தப்பில்லை...

வா போகலாம்" என்று 

வாஞ்சையோடு அழைக்கும்

அன்பிற்கும்

அசைவப் பிரியர்களுக்கும் 

அர்ப்பணிக்கப்பட்ட நாள்!


#பகத்சிங் 





Comments

Post a Comment

Popular posts from this blog

மரப்பயணம்

திருமா திமுகவுடன் தான் இருப்பார்!!

அறம்