தொலைதூர துரத்தல்






🧑‍🦱Hai...

👩Hi...

👨‍🦱சொல்லுங்க என்ன பண்றீங்க சாப்டாச்சா

👩ம்ம்.. இப்பதானே சொன்னேன் சாப்டேன்னு... மறுபடியும் கேக்குறீங்க..

🧑‍🦱Ok ok...அப்பறம்... என்ன பேசவே மாட்டேன்னு சொன்னீங்க, இப்ப பேச ஆரம்பிச்சிட்டீங்களே...

👩 பின்ன, நீங்க தான் மெசேஜ் பண்ணிக்கிட்டே இருந்தீங்க, சரி என்ன தான் பேசணும்னு நானும் ரிப்ளை பண்ணேன்.

 🧑‍🦱எப்பா... உங்ககிட்ட இருந்து ரிப்ளை வரதுக்குள்ள போதும் போதும் ஆயிடுச்சு..

 👩முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட ஒரு பொண்ணு எப்படிங்க பேசுவா... அதெல்லாம் யோசிக்க மாட்டீங்களா.. ஆன்லைன்ல இருந்தா மெசேஜ் பண்ணிகிட்டே இருப்பிங்களா..

🧑‍🦱அய்யோ அப்படி இல்லைங்க.. உங்கள எங்கேயோ பார்த்த மாதிரி இருந்துச்சு அதான் மெசேஜ் பண்னேன். ஏன் முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட பேச பயமா. நான் என்ன கடிச்சா திங்க போறோம்.

 👩பயம் எல்லாம் ஒன்னும் இல்ல. யாருன்னு தெரியாதவங்ககிட்ட எப்படி பேசுறது... அதான் சின்னதயக்கம்.. 

🧑‍🦱crct thaan madam.

👩ம்ம்..

🧑‍🦱அப்பறம்.. என்ன பண்றீங்க.

 👩நான் இப்பதான் ஒர்க் முடிச்சுட்டு வந்தேன்.

🧑‍🦱 வொர்க் பண்றீங்களா எங்க...

👩 நான் சென்னையில் ஒர்க் பண்றேங்க.. லாக்டவுனுக்கு அப்புறம் போகவே இல்ல...Work from homeதான் பாத்துக்கிட்டு இருக்கேன்..

🧑‍🦱அப்படியா அப்ப ஆன்லைன் காட்டணுச்சி..

👩 ஏங்க.... நெட்டு ஆன்லைன்ல இருந்தா ஆன்லைன்ல தான் காட்டும்.. Messenger அப்படித்தான் ங்க..

🧑‍🦱ஓ.... Ok... Ok....

 👩ஆமா.... நீங்க எந்த ஊர்

 🧑‍🦱நானா... நான் கந்தர்வகோட்டை ங்க..

 👩கந்தர்வகோட்டையா... எது இந்த அருந்ததி படத்தில் வருமே அந்த கந்தர்வக்கோட்டையா?

🧑‍🦱ம்ம்ம்..ஆமா வாங்க அருந்ததி போய் பாத்துட்டு போகலாம்..

 👩ஐயோ பேயினா பயம் ங்க.

🧑‍🦱அட நீங்க வேற.. இது அந்த கந்தர்வகோட்டை இல்லங்க.. இது வேற கந்தர்வக்கோட்டை..தஞ்சாவூர் புதுக்கோட்டை எடையில இருக்குங்க எங்க ஊர் 

 👩ஓகேங்க...

 🧑‍🦱போங்க வாங்க எல்லாம் வேணாம் போ வான்னு சொல்லு..

 👩ட்ரை பண்றேன்

🧑‍🦱ம்ம்..

👩 சரி புதுக்கோட்டை பக்கம் எந்த ஆளுங்க இருப்பாங்க 

 🧑‍🦱புரியல.

👩 என்ன ஆளுங்க இருப்பாங்க எங்க பக்கம் நாங்க தான் அதிகம்.. குடியானவங்க தான் அதிகம்..

🧑‍🦱எங்க பக்கம் எல்லாம் மனுச ஆளுகதான் இருப்பாங்க

 👩ரொம்ப விவரமா பேசுறதா நெனப்பு.

🧑‍🦱 ஏன் சாதி தெரிஞ்சாதான் பேசுவீங்களா

 👩சீச்சீ.. அப்படி இல்லைங்க நாங்க சாதி எல்லாம் பார்க்க மாட்டேன்.

🧑‍🦱அப்படியா.

👩ஆமா நான் சென்னையில் தங்கி இருக்க ஹவுஸ் ஓனர் கூட Sc தான்... ஆனா சகஜமா தான் பழகிக்குவோம். நான் ஜாதி எல்லாம் பார்க்க மாட்டேன்..

🧑‍🦱ஓ

👩உன்ன பாத்தா நம்ம ஆளு மாதிரி தெரிஞ்சது. அதான் கேட்டேன்.இல்லன்னா நான் ரிப்ளை பண்ணி இருக்க மாட்டேன் நம்பர் கூட கொடுத்து இருக்க மாட்டேன்..

🧑‍🦱ஓ... எத பாத்து என்னைய நம்ம ஆளு மாதிரி இருக்குன்னு சொல்றீங்க...

 👩அதெல்லாம் ஆள பாத்தாலே தெரியும், நீ தைரியமா தெளிவா பேசுற அப்ப நம்ம ஆள தான் இருப்ப..

🧑‍🦱ம்ம்.. என் ZIP-அ தொறந்து காட்றேன்.. பாத்துட்டு சொல்றியா. நான் நம்மாளான்னு..

👩 ச்சீ.. நீ என்ன இப்படி பேசுற.. நான் சும்மாதான் கேட்டேன் நான் சாதி எல்லாம் பார்க்க மாட்டேன்....

❤️🖤💙

#பகத்சிங்

Comments

Popular posts from this blog

மரப்பயணம்

திருமா திமுகவுடன் தான் இருப்பார்!!

அறம்