அதிகாரத்துக்கு எதிரான அனல்!


 படம் ஆரம்பித்த 45 வது நிமிடத்தில் தெரியவரும் படத்திற்கும் தலைப்பிற்கும் என்ன தொடர்புள்ளது என்று. சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் தன்னோடு வேலை பார்க்கும் சகப் பெண் ஊழியரின் திருமணத்தில் கலந்து கொள்ள அந்தப் பெண்ணின் சொந்த ஊருக்கு செல்கிறார் மதி.

கொடைக்கானல் மலைப்பகுதியில் இருக்கும் சின்னஞ்சிறிய கிராமத்தில், மலைவாழ் மக்களின் மரபுப்படி திருமணம் நடந்து முடிய, திருமணம் முடிந்த நாளின் மாலைப்பொழுதில் தான் தங்கியிருக்கும் விடுதி அறையைவிட்டு, வெளியில் வந்து மலையின் இயற்கை காட்சி ரசித்துக் கொண்டிருக்கிறாள், தனியாக!


 அப்போது பின்னாடி இருந்து ஒருவர் தன் வாயை மூடி கடத்திச் செல்ல, அவளுக்கு சுயநினைவு திரும்பும்போது நடு இரவில் அடர்ந்த காட்டில் மத்தியில் இருப்பதை உணர்கிறாள்! தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதையும், தற்போது தனிமையில் காட்டுக்குள் இருப்பதை உணர்ந்து கொண்டு அங்கிருந்து மெல்ல மெல்ல நகர்ந்து, ஊர்க்காரர் ஒருவரின் உதவியோடு அருகில் இருக்கும் சிற்றூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் சிகிச்சை எடுத்துக்கொள்ள செல்கிறாள் நள்ளிரவில். அப்போது என்ன பிரச்சனை என்று மருத்துவர் கேட்க, நடந்ததை சொல்லுகையில், "காவல் வழக்கு பதிவு இல்லாமல் சிகிச்சை அளிப்பது தவறு " என மருத்துவர் சொல்லிவிட, அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கின்றாள். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து காவல்துறையினர் குற்றவாளியை தேடிக் கொண்டிருக்க, காவல்துறை தான் அந்த குற்றவாளி என இறுதியில் அவளே உணர்ந்து கொள்கிறாள்.

 அதன் பிறகு அவளுக்கும் காவல்துறையினருக்கும் நடக்கும் போராட்டமும், இந்த சமூகத்தை எதிர்கொள்ளும் மன துணிவும் தான் மீதி படம். தனக்கு நிகழ்ந்த வன்புணர்வை மிகத் தைரியமாக எடுத்துச் சொல்வதிலும், மானம் எனும் உணர்வை பெண்ணின் உடலை மையப்படுத்தி இயங்கும் இந்த சமூக கட்டமைப்பை உடைப்பதிலும் மிக நேர்த்தியான கதைக்களத்தோடு நகர்கிறது திரைக்கதை.


 பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியாக குற்றங்களின் போது பெண்ணின் உடையின் மீதும் , அவர்களின் நடத்தையின் மீதும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிக்கும் இந்த சமூகம், அதை ஒருபோதும் ஆண்களின் பக்கம் திருப்புவதே இல்லை. இதை உன்னிப்பான காட்சிகளின் வாயிலாக நம்மிடம் காட்டியிருக்கிறார்கள்.


 இது ஒரு வழக்கமான கதைக்களமாக இருந்தாலும், " திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணாக இருந்து கொண்டு, பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, இந்த சமூகத்தையும், குடும்பத்தையும், காவல்துறையின் ஆணாதிக்க அதிகாரம் மையத்தையும் எதிர்கொள்ளும் துணிச்சலான கதாபாத்திரமாக" செயல்படுவதிலும்தான் மற்ற கதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு வென்று நிற்கிறாள் மதி!


#பகத்சிங்


Comments

Popular posts from this blog

மரப்பயணம்

திருமா திமுகவுடன் தான் இருப்பார்!!

அறம்