தேடி அடிப்போம்! தேசிய பாம்புகளை!!
நல்ல பாம்பு
அருகில் இருந்தால்
வெல்லப்பாகு
வாடை வருமாம்!
வாடையில் மயங்கி
பாதையை மாறாமல்
நின்றால்
பாடையில் ஏறுவது
பகிரங்க உறுதி!
வாடையில் மறைகிறது
வாழ்வை முடிக்கும் விசம்!!
அதேபோல,
செய்யும்
மதவெறி தாக்குதல்களை
நடத்தும்
மதவெறி அரசியலை
*தேசியம்* எனும்
ஆடையை அணிந்து
*தேசபக்தி*
வாடையில் கலந்து
வெறுப்பு அரசியலை
விதைத்து அலைகின்றன
தேசம் முழுக்க
சில தேசிய பாம்புகள்!!
படிப்பில் மட்டும்
முட்டை போட்ட
நச்சுப்பாம்புகளுக்கு
பொருளாதார புரிதலும்
இல்லை!
பொதுமக்கள் மீதும்
அக்கறையில்லை!!
நச்சுரனையில்லா
நல்ல பாம்புளுக்கு
நாட்டுப்பற்று
மட்டுமே கேடு
தாமரை புற்றுக்குள்
தஞ்சம் புகுந்த
பாம்புகளை
*ஈரோட்டுத் தடி* எடுத்து
தலையில் அடிப்பதா?
இல்லை
அண்ணலை ஆயுதமாக்கி
பாம்பின்
பல்லை பிடுங்குவதா?
எத்தனை படம்
எடுத்தாலும்
எவர் இசையாமைத்தாலும்
எச்சரிக்கையாய் இருப்போம்
தேசிய பாம்புகளிடம்!
#பாம்படிப்பதில் கைத்தேர்ந்த பகத்!

This comment has been removed by the author.
ReplyDeleteஅருமையான நிதர்சனம்
ReplyDelete