எம்மக்களே!!

எம்மக்கள்!!

இலைகள் மாதிரி!!
அறியாமை எனும் காற்றில்
தெளிவில்லாமல் வாழ்ந்து
பின்
சருகாக வீழ்கின்றனர்!!

புரட்சி எனும்
புயல்கொண்டே அவர்களை
புதுப்பிக்க வேண்டும்!!

எம்மக்கள்,
பரமசிவன் பாம்பு மாதிரி
பழமைவாதம் தலைக்கேறியதில்
பதவியில் இருந்தும்
பயனற்று கிடக்கின்றனர்!!

பகுத்தறிவு என்பதை
பறை இசைபோல
பளிச்சென்று சாற்றி
அவர்களை
பக்குவப்படுத்திட வேண்டும்!!

எம்மக்கள்!
காட்டுக்குதிரை மாதிரி!!
ஆதரவும் அரவணைப்பும்
இல்லாதபோதும்
சுதந்திரமற்ற சமூகத்தில்
சுழி இருக்க விடாத மாதிரி
சுற்றி திரிகின்றனர்
சுதந்திரமாய்!!

அவர்களுக்கு
கல்வி எனும்
கடிவாளம் போட்டு
நிதானப்படுத்தி
பின்
நிலைப்படுத்திட வேண்டும்!!

எம்மக்கள்!!
கூண்டுக்குள் அடைப்பட்ட
குருவிகள் மாதிரி!!
குழப்பவாதிகளிடம் சிக்கி
குலப்பெருமை
பணப்பெருமை பேசி
குறுகிய வட்டத்திற்குள்
சுருங்கி விட்டனர்!!

அவர்களின் அறியாமை
கதவை உடைத்து
ராஜாளி என
உணர்த்தி
பொதுவுடைமை எனும் கண்கொண்டு
உலகை
உயர்ந்து பார்க்க செய்திடல் வேண்டும்!!

எம்மக்கள்
வெட்டிபோட்ட விறகு மாதிரி!!
அறிவென்பது சிறிதும் இன்றி
அங்காளி பங்காளி என்று
பிளவுபட்டு கிடக்கின்றனர்!!

அவர்கள்
எந்த பயனுமின்றி

எரிந்து சாம்பலாக போகும் முன்

எடுத்துரைக்க வேண்டும்!
எல்லோரும் சமம் என!!

எம்மக்கள்,
தொலைந்து போன
வரலாறு மாதிரி!!
ஆளுக்கொரு கதை சொல்லி
அனுசரித்து கொள்கின்றனர்!!

தொலைநோக்கு பார்வை கொண்டு
அவர்களை
நேர்படுத்திடல் வேண்டும்!!

எம்மக்கள்..
கோபுரம் காண துடிக்கும்
கோயில் பக்தன் மாதிரி!!

ஆடம்பரத்தையும்
ஆதிக்க போதையையும்
அன்னார்ந்து பார்க்கிறாரான்!

அந்த கோபுரம் மாதிரியே
அதில்
அறிவுக்கொன்றுமில்லை என
அறிவுறுத்தல் செய்ய வேண்டும்!


சீர்திருத்த பணியில்

சிறுவன் ஒருவனாய்

நானும் என் தோழர்களுடன்...


#பகத்சிங்


sbhagath6@gmail.com
7550383005

ஆகஸ்ட் 1 2020ல் எழுதியது..

Comments

  1. சிறப்பு தம்பி......வாழ்த்துகள்

    ReplyDelete
  2. அருமை சகோதரரே....

    ReplyDelete
  3. அருமை தோழர்

    ReplyDelete
  4. அருமை அண்ணா i love you so much 😍😍😘

    ReplyDelete
  5. அருமை அருமை வாழ்த்துக்கள் மாப்பிள்ளை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மரப்பயணம்

திருமா திமுகவுடன் தான் இருப்பார்!!

அறம்